Bumper Lottery: 20 கோடி விழுந்த லாட்டரி டிக்கெட்! ஐயப்ப பக்தருக்கு தெரியாமல் அனுப்பிட்டேன்! கேரள ஹைகோர்ட்டில் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீபத்தில் நடந்த "கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி"க்கான (Kerala Christmas New Year Bumper Lottery) குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி XC 138455 என்ற எண்ணுக்கு அடித்தது. ரூ.20 கோடி பரிசுத் தொகை என்பதால் முதல் பரிசு அடித்த நபர் யார் என கேரள சேட்டன்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரள உயர் நீதிமன்றம் முதல் பரிசுத் தொகை அடித்த நபருக்கு ரூ.20 கோடியை வழங்க தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.
கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலமாக உள்ளன. அங்கு தினம் தோறும் ரூ.1 கோடி மதிப்பு கொண்ட டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடைபெறும். அதுபோக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கான குலுக்கலும் நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி
இதற்கு பல கோடிகளில் முதல் பரிசு கிடைக்கும் என்பதால், லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும். தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகி வரும் நிலையில், இதற்கு முன்பாக கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
இதற்கான முதல் பரிசு ரூ.20 கோடியாகும். 400 ரூபாய் விலை கொண்ட இந்த டிக்கெட்டை கேரள சேட்டன்கள் மட்டும் இன்றி கேரளாவிற்கு சென்ற வெளி மாநிலத்தவர்களும் ஆர்வத்துடன் வாங்கியதை பார்க்க முடிந்தது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. முதல் பரிசு XC 138455 என்ற எண்ணிற்கு அடித்த போதும் பரிசு விழுந்த நபர் யார் என்று தெரியவில்லை.
முதல் பரிசு ரூ.20 கோடி வழங்க தடை
இதனால், அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்று கேரள சேட்டன்கள் பெரும் எதிர்பர்ப்புடன் இருந்த நிலையில், தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் பரிசுத்தொகையை விடுவிக்க கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கேரளாவின் பிரவோம் பகுதியை சேர்ந்தவர் சஜிமோன். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இவர் எர்ணாகுளம் தெற்கு ரயில்வே நிலையம் அருகே சபரிமலை பக்தர்களுக்காக மினிவேன்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நெய் பிரசாதம் அடங்கிய பை
அதில், முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை தவறுதலாக தொலைத்துவிட்டதால், அதற்கான பரிசுத்தொகையை விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளர். சஜிமோன் தனது மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தவறுதலாக நெய் பிரசாதம் அடங்கிய பையை எனது அலுவலகத்தில் விட்டு சென்றார்.
அந்த பிரசாதம் அடங்கிய பைகளை சேகரித்து, ஐயப்ப பக்தரிடம் தகவல் தெரிவித்தேன். அவரும் அதை கூரியர் செய்து விடுமாறு கூறினார். இதற்கிடையே, நான் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியை வாங்கிவிட்டு, அதிர்ஷ்டம் அடிக்கட்டும் என்று அந்த நெய் பிரசாத பையில் போட்டு வைத்து இருந்தேன். லாட்டரி முடிவுகள் வெளியாகும் நாள் அன்று தவறுதலாக நான் மயங்கி விழுந்துவிட்டேன்.
டிக்கெட்டை ஊழியர் எடுத்துள்ளார்
சில நாட்களுக்கு முன்புதான் நான் முழு சுயநினைவை அடைந்தேன். அதன்பிறகு எதேச்சையாக டிக்கெட் இருந்த பையுடன் சேர்த்து விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தருக்கு கூரியர் அனுப்பி வைத்துவிட்டேன். பிறகுதான், அதில் லாட்டரி டிக்கெட் இருந்தது. முதல் பரிசு அடித்த அந்த லாட்டரி டிக்கெட் இருந்ததால் உடனடியாக கூரியை நிறுத்துமாறு கூரியர் நிறுவன அதிகாரிகளை கேட்டேன்.
ஆனால், லாட்டரி டிக்கெட்டுடன் அந்த யாத்ரிகருக்கு நெய் பிரசாதம் கூரியர் செய்யப்பட்டதாக அந்த ஊழியர் கூறினார். அந்த டிக்கெட்டை ஊழியர் எடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
தடை விதித்த உயர் நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குரியன் தாமஸ் அமர்வு, லாட்டரி டிக்கெட்டிற்கான பரிசுத்தொகையை மறு உத்தரவு வரும் வரை வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், கேரள லாட்டரி துரை சீலிட்ட கவரில் லாட்டரி டிக்கெட்டின் இரண்டு பக்கங்களையும் நகல் எடுத்து வைக்க வேண்டும். அதேபோல பரிசுத்தொகை உரிமை கோருபவரின் விவரங்களையும் அதில் இணைத்து வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications