கேரளா லாட்டரியில் ஒரு கோடி பரிசு.. அடுத்த நொடி வட மாநில தொழிலாளி செய்த சம்பவம்.. திகைத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் வட மாநில தொழிலாளி ஒருவருக்கு லாட்டரி சீட்டில் பம்பர் பரிசாக ரூ.1 கோடி விழுந்துள்ளது. அந்த லாட்டரி சீட்டை காப்பாற்றுவதற்காக தொழிலாளி செய்த சம்பவம் போலீசாரை ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டது.

கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. கேரள அரசே லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்கிறது. தமிழகத்தில் இருந்து கேரள எல்லைக்குள் நுழைந்து விட்டால் முதலில் நம்மை வரவேற்பது இந்த சாலையோர லாட்டரி டிக்கெட் விற்பனை மையமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கேரளாவில் லாட்டரி சீட்டுக்கள் பிரபலம். கேரளாவில் ஓணம் போன்ற பண்டிகையின் போது ரூ.25 கோடி பம்பர் பரிசாக அனூப் என்பவருக்கு விழுந்தது

construction-worker-from-west-bengal-sought-refugee-in-police-station-after-winning-a-kerala-lotter

இந்த லாட்டரியில் பரிசு வென்றவர்கள் ஒரே நாளில் ஓபாமா ரேஞ்சுக்கு நாடு முழுக்க பிரபலம் ஆகியும் விடுவார்கள். இதனாலாயே, தங்களுக்கு பாதிப்புகளும் ஏற்படுவதாக லாட்டரியில் பரிசு வென்றவர்கள் சில நேரம் அடையாளத்தை மறைக்கவும் செய்து விடுவார்கள். இந்த நிலையில், கேரளாவில் ஒரு கோடி பரிசு விழுந்த வடமாநில தொழிலாளி ஒருவர், தனது நண்பர்களுக்கு பயந்து அழுது கொண்டே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சுவாரசியமும் அரங்கேரியுள்ளது. இது குறித்த செய்தியை காணலாம்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிர்சு. கேரள மாநிலத்தில் தங்கி பணியாற்றி வரும் பிர்சுவுக்கு லாட்டரி சீட்டும் வாங்கும் பழக்கமும் இருந்துள்ளது. என்றாவது அதிர்ஷ்ட தேவதை தனது கண்ணை திறந்து விடாதா? என்ற ஆசையில் லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள தம்பனூரில் உள்ள கடை ஒன்றில் லாட்டரி சீட்டை பிர்சு வாங்கியுள்ளார். இந்த லாட்டரியில் லாட்டரியில் பிர்சுவுக்கு ஒரு கோடி பரிசு விழுந்துள்ளது. தனக்கு பரிசுத்தொகை விழுந்ததால் அவருக்கு கையும் ஓடவில்லை.

காலும் ஓடவில்லை. என்ன செய்வதேன்றே தெரியாமல் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அதேவேளையில் தனது நண்பர்கள் இந்த லாட்டரி சீட்டை தன்னிடம் இருந்து அடித்து பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சம் பிர்சுவுக்கு வந்துள்ளது. இதனால், ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்த லாட்டரியை எப்படியாவது காப்பாற்றி பரிசுத்தொகை கிடைப்பதை உறுதி செய்து விட வேண்டும் என்று எண்ணி காவல் நிலையம் செல்ல முடிவு செய்தார்.

இதனால், என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்ட படியே போலீஸ் நிலையத்தில் போய் தஞ்சம் அடைந்துள்ளார். தம்பானூர் காவல் நிலையம் சென்ற பிர்சுவை காவலர்களும் தைரியம் கொடுத்து ஏதாவது பிரச்சினை என்றால் வாருங்கள்..பார்த்துக் கொள்கிறோம் என அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டும் இன்றி வங்கி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு போலீசார் பேசி உறுதி செய்தார்களாம். இதையெல்லாம் பார்த்த பிறகே நிம்மதியுடன் பிர்சு கிளம்பியிருக்கிறார்.

கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த பிர்சுவுக்கு லாட்டரியில் அடித்துள்ள ஒரு கோடி ரூபாய் பரிசில் வருமான வரிப்பிடித்தம் போக, 65 லட்சம் கிடைக்கும். இதை வாங்குவதற்கு கேரள லாட்டரி அசோசியேசனுக்குப் போய் விண்ணப்பிக்க வேண்டும். கேரளாவில் வெளி மாநில தொழிலாளிகள் லாட்டரியில் பரிசு விழுந்ததும் இப்படி காவல் நிலையத்தில் போய் தஞ்சம் அடைவது புதிது அல்ல. ஏற்கனவே பல முறை இதுபோல லாட்டரியை திருடிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பலரும் காவல் நிலையம் சென்று இருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+