கண்டெய்னர்களுடன் கடலில் தடுமாறிய சரக்கு கப்பல்! கடல் சீற்றத்தால் கேரள கடல் பகுதியில் அசம்பாவிதம்
திருவனந்தபுரம்: கேரள கடல் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் நிலைத்தடுமாறி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்த 24 பேரில், 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
எம்எஸ்சி எல்எஸ்ஏ 3 என பெயரிடப்பட்ட லைபிரியா நாட்டை நேர்ந்த சரக்கு கப்பல் நேற்று விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கப்பல் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. கப்பலின் கேப்டன் எப்படியாவது கப்பலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. எனவே கப்பல் கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து கேப்டன் இந்திய கடற்படைக்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளார்.
செய்தி கிடைத்தவுடன் இந்திய கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்த கப்பல் ஏற்றி சென்ற கண்டெய்னரில் சில ஆபத்தான பொருட்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே, இவை கடலோர மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட கூடாது என்று கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து சில தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
விபத்து நடந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக கப்பலில் 24 பேர் இருந்திருக்கின்றனர். இதில் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியாளர் ஆகியோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த விபத்து குறித்து இந்திய கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய கடலோர காவல்படையின் (ICG) கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கப்பல் சாய்ந்திருப்பதால் சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கப்பலின் நிலைத்தன்மையை பராமரிக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications