கேரளாவில் இந்து 'ஐஏஎஸ் அதிகாரிகள்' என வாட்ஸ் அப் குழு! அடிபடும் தமிழக அதிகாரி பெயர்.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ் குரூப் உருவாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோபால கிருஷ்ணன் என்ற ஐஏஎஸ் அதிகாரி அட்மினாக வைத்து இந்த குழு உருவாக்கப்பட்டு இருந்த நிலையில், தனது போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி காவல் துறையில் புகாரளித்துள்ளார்.
கேரளாவில் இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் குழு என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் தனியாக குரூப் ஒன்று உருவாக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளாவில் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரான கோபால கிருஷ்ணன் என்ற அதிகாரியின் செல்போன் எண் வாட்ஸ் அப் அட்மினாக இருந்தது.

சிவில் பணிகளில் ஈடுபடும் உயரதிகாரிகளில் மத ரீதியாக தனி குழு அமைத்து இருப்பதாக வெளியான தகவல் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே, குறிபிட்ட எந்த ஒரு வாட்ஸ் அப் குழுவையும் தான் துவங்கவில்லை என்று மறுத்துள்ள வணிகத்துறை இயக்குநரான கோபால கிருஷ்ணன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கோபால கிருஷ்ணன் இது தொடர்பாக அளித்த புகாரில், "தனது செல்போன் எண்ணை அட்மினாக வைத்து மலையாளி இந்து அதிகாரிகள் மற்றும் மலையாளி முஸ்லீம் அதிகாரிகள் என்ற வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டு இருப்பதாக என்னுடைய நண்பர் என்னிடம் கூறினார். எனக்கு தெரியாமலேயே எனது எண்ணை பயன்படுத்தி இப்படி பல வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தனக்கு தெரியாமலே தனது செல்போன் எண் ஹேக் செய்யப்பட்டு என்னை அட்மினாக வைத்து வாட்ஸ் அப் குழு உருவாக்கியதோடு, எனது காண்டாக்ட் லிஸ்டில் உள்ள உறுப்பினர்கள் குழுவில் இணைக்கபட்டு இருப்பதாகவும் புகாரில் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார். ஐ.எஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில், காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜீவ், மத அடிப்படையில் பிளவுகள் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும், இது தொடர்பாக கேரள அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு என சில நடத்தை விதிகள் உள்ளன. பொது நிர்வாகத்துறையின் கீழ் ஐஏஎஸ் அதிகாரிகள் வருகிறார்கள். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தமிழகத்தை சேர்ந்தவர்: ஐஏஎஸ் அதிகாரியான கோபால கிருஷ்ணன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். 2013 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான கோபால கிருஷ்ணன், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராகவும் தேசிய சுகாதர திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த வாட்ஸ் அப் குரூப் உருவாக்க்கப்படதாகவும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சர்ச்சை கிளம்பியதால் உடனடியாக இந்த குரூப் அழிக்கப்பட்டதாகவும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications