கவலைக்கிடமான நிலையில் 2 பேர்.. ஐசியூவில் சிகிச்சை.. தீவிரம் அடைந்த கொரோனா.. கேரளாவில் பகீர்!
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த 17 பேரில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த 17 பேரில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் இருவரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க 119,177 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். உலகம் முழுக்க 4,295 கொரோனாவால் பலியாகி உள்ளனர்
.சீனாவில் 80,778 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். சீனாவில் 3,158 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.கேரளாவில்தான் அதிக அளவில் மக்கள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகம்
கொரோனா வைரஸ் முன்பை விட இப்போது 17% கூடுதல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா சீனாவில் மட்டும் கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. கேரளாவில் தற்போது 17 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. கேரளாவில் முதலில் 3 பேருக்கு வைரஸ் தாக்கி அது குணப்படுத்தப்பட்டது. அதன்பின் கேரளாவில் இரண்டு நாள் முன்பு ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. பத்தினம்திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

வேறு எத்தனை
இந்த 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உறவினர்கள் 2 பேருக்கு வைரஸ் தாக்கியது.இவர்கள் இத்தாலியில் இருந்து வந்த செய்தியை மறைத்துள்ளனர். இதனால்தான் கேரளாவில் கொரோனா பரவி இருக்கிறது. அவர்கள் தங்கள் பயண விவரத்தை மறைத்ததுதான் இந்த சிக்கலுக்கு காரணம் . கேரளாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் 4 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும் வைரஸ் தாக்கியுள்ளது.

மொத்தம் எத்தனை
இதன் மூலம் கேரளாவில் குணப்படுத்தப்பட்ட 3 பேரோடு சேர்த்து 17 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எல்லோரும் தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த 17 பேரில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களின் நோய் தாக்குதல் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. இவர்கள் இருவரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியாக சிகிச்சை
இந்த நிலையில் ஒருவரின் நிலை மிக மோசமாகி உள்ளது. அவரின் வயது 65 என்று கூறப்படுகிறது. இன்னொருவரின் வயது 48 என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் இந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வைரஸ் பரவாமல் இருக்க மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications