கேரளாவில் மீண்டும் பரபரப்பு.. ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 39 பேர் பாதிப்பு!
கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிய நிலையில் கடந்த மாதம் இந்த வைரஸ் கேரளாவிலும் பரவியது. கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பரவியது.
இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கியது. கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இன்னொரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி நடந்தது
அதன்பின் கேரளாவில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு இளைஞருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 2239 பரிசோதனை செய்யப்பட்டு வந்தனர். கேரளாவில் இவர்கள் தனி அறையில் தீவிரமாக சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களை தனியாக வைத்து மிக கடுமையாக சோதனைகளை செய்தனர்.

கடைசியில் என்ன
கடைசியில் இந்த மூன்று பேரும் குணம் அடைந்தார்கள். இவர்களுக்கு கடைசியாக் நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது. 45 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் மூன்று பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து இந்த வைரஸ் மொத்தமாக விரட்டி அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின் டெல்லியில் கொரோனா பரவியது. டெல்லியில் மூன்று பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத் எப்படி
ஹைதராபாத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கியது. டெல்லியில் உள்ள 16 இத்தாலியை சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.லடாக்கில் இருவருக்கும், தமிழகத்தில் காஞ்சிப்புரத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மூலம் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.

நிலை என்ன
இந்த நிலையில் கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பத்தினம்திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எப்படி
ஏற்கனவே 3 பேருக்கு கேரளாவில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. தற்போது கூடுதலாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இதனால் தீவிரமாக பணிகளை முடிக்கிவிட்டுள்ளார். அங்கு மீண்டும் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications