அந்த கடத்தல் அசாமியால் வந்த வினை.. கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. பெரும் பரபரப்பு!
கேரளாவில் இன்று ஒரே நாளில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்தவர்களின் மாநிலத்தில் கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.

தீவிரம் அடைந்துள்ளது
தற்போது கேரளாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. காசர்கோட்டில் இன்று மட்டும் 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் ஐந்து பேருக்கு, பத்தினம்திட்டாவில் ஒருவருக்கு, எர்ணாகுளத்தில் 2 பேருக்கு, திருச்சூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரையும் தீவிரமாக கேரளா சுகாதார துறை கண்காணித்து வருகிறது. இவர்கள் தொடர்பு கொண்ட நபர்களையும் கேரளா அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கேரளா காசர்கோட்
கேரளாவில் காசர்கோட்தில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அங்கு கொரோனா ஏற்பட்ட 45 வயது பயணி ஒருவர்தான் காரணம் என்று கூறுகிறார்கள். தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த இவர் கடந்த 11ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தார். இவருக்கு 19ம் தேதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

தங்கம் கடத்தல்
தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த இவர் நிறைய நகை கடைகளுக்கு சென்றுள்ளார். தன்னுடைய உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளார். திருமணம் ஒன்றுக்கு சென்று இருக்கிறார். 3000க்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளார். பல்வேறு கடத்தல் கும்பல்களை சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்துள்ளார். இதனால் அவர் தான் சந்தித்த நபர்கள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவில்லை.

உண்மைகளை மறைத்தார்
தான் யாரை பார்த்தேன், எங்கே சென்றேன் என்பதை எல்லாம் இவர் மறைத்து இருக்கிறார். சக கடத்தல்காரர்களை காட்டி கொடுக்க முடியாது என்பதால் இவர் உண்மைகளை மறைத்து உள்ளார். இதனால் அவர் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட நபர்களுக்கு இப்போது வரிசையாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவுகிறது
இவர் இன்னும் பலர் தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த கடத்தல் ஆசாமி உண்மையை இன்னும் சொல்லாமல் தவிர்த்து வருகிறார். இதனால்தான் கேரளாவின் கொரோனா தீவிரமாகி வருகிறது. முக்கியமாக காசர்கோடு மாவட்டத்தில் தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. கேரளாவில் கவனிக்க வேண்டிய விஷயம் அங்கு 25 பேருக்கு மட்டும்தான் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் எல்லாம் அவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை மொத்தம்
காசர்கோட்டில் மொத்தமாக 36 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாக்காவில் 64,321 தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 63,937 பேர் வீட்டிலும், 383 மருத்துவமனையிலும் இருக்கிறார்கள். 120 பேர் இன்று மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 4,291 பேரின் ரத்தம் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2987 பேருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளார். பாஸிட்டிவ் வந்த 95 பேர் தவிர மீதம் உள்ளவர்களுக்கு இன்னும் ரிசல்ட் வரவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications