திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல்முறை.. புதிய சாதனை படைத்த கேரளா.. கொரோனா போராட்டத்தில் முதல் வெற்றி இதுதான்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா இன்று புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது.

Recommended Video

    கொரோனா தடுப்பு நடவடிக்கை... உலக நாடுகளை வியக்க வைத்த கேரளா

    கொரோனாவிற்கு எதிரான போரில் கேரளா தீவிரமாக வென்று வருகிறது. கேரளாவில் இதுவரை 378 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்று மட்டும் 1118 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    அங்கு மொத்தமாக 15,683 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 14,829 பேருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 715 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

    கேரளாவில் எத்தனை பேர்

    கேரளாவில் எத்தனை பேர்

    கேரளாவில் மொத்தம் 378 பேர் கொரோனா நோயோடு அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று 36 பேர் குணப்படுத்தப்பட்டனர். இன்று 19 பேர் குணப்படுத்தப்பட்டனர். இத்தனை நாட்கள் குணப்படுத்தப்பட்ட எல்லோரையும் சேர்த்து இதுவரை கேரளாவில் மொத்தம் 198 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலேயே கொரோனாவால் இவ்வளவு பேர் வேகமாக குணப்படுத்தப்பட்டது கேரளாவில் மட்டும்தான்.

    கேரளாவில் எத்தனை பேர்

    கேரளாவில் எத்தனை பேர்

    கேரளாவில் மொத்தம் 378 பேர் கொரோனா நோயோடு அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று 36 பேர் குணப்படுத்தப்பட்டனர். இன்று 19 பேர் குணப்படுத்தப்பட்டனர். இத்தனை நாட்கள் குணப்படுத்தப்பட்ட எல்லோரையும் சேர்த்து இதுவரை கேரளாவில் மொத்தம் 198 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலேயே கொரோனாவால் இவ்வளவு பேர் வேகமாக குணப்படுத்தப்பட்டது கேரளாவில் மட்டும்தான்.

    செம சாதனை

    செம சாதனை

    அங்கு குணப்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதம் 50% தாண்டியுள்ளது. அதோடு தற்போது அங்கு கொரோனா இருக்கும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 178தான். அதாவது அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை விட குறைவான நோயாளிகள்தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இந்தியாவில் இப்படி ஒரு வெற்றியை பெற்று இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான்.

    முதல் வெற்றி

    முதல் வெற்றி

    இதன் மூலம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா இன்று புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. இது கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முதல் வெற்றியாகும். அங்கு தினமும் 10 பேருக்கும் அதிகமாக குணப்படுத்தப்படுகிறார்கள். கேரளாவின் இந்த வெற்றிக்கு அங்கு அதிகமான நபர்கள் டெஸ்ட் செய்யப்பட்டதுதான் காரணம் ஆகும்.

    முழு வெற்றிக்கு வாய்ப்பு

    முழு வெற்றிக்கு வாய்ப்பு

    விரைவான டெஸ்ட் மற்றும் முறையான கட்டுப்பாடு ஆகியவை மூலம் கேரளா கொரோனாவை 80% வென்றுவிட்டது. இந்த லாக் டவுன் முடிவில் பெரும்பாலும் கேரளாவில் நோயாளிகள் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லோரும் குணமடைந்து இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதில் கேரளாவில் காசர்கோடு மற்றும் கன்னூர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. காசர்கோட்டில் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கண்ணூரில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    கேரளா விடுபடுகிறது

    கேரளா விடுபடுகிறது

    இந்த நிலையில் இன்றும் மட்டும் 6 பேர் காசர்கோட்டில் குணமடைந்து உள்ளனர். இன்று அங்கு யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. இதன் மூலம் காசர்கோடு வேகமாக கொரோனாவில் இருந்து விடுபட்டு வருகிறது. கேரளாவில்தான் தற்போது மிக குறைவான இறப்பு சதவிகிதம் உள்ளது. அங்கு 1%க்கும் குறைவான மக்கள்தான் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: Kerala almost win against the epidemic, more number of discharges than active patients in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X