கலக்கல்.. ரோபோக்களை களமிறக்கிய கேரளா.. கொரோனாவை சமாளிக்க மாஸ்டர் பிளான்.. வீடியோ!
கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ரோபோக்களை அம்மாநில சுகாதாரத்துறை களமிறக்கி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ரோபோக்களை அம்மாநில சுகாதாரத்துறை களமிறக்கி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. முக்கியமாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 125 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை இந்தியாவில் 3 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் 38 பேருக்கு தாக்கியுள்ளது.

கேரளா நிலை
கேரளாவில் இந்த வைரஸ் மொத்தம் 23 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் இந்த வைரஸ் தாக்கியது. அங்கு 3 பேருக்கு வைரஸ் தாக்கிய நிலையில் அவர்கள் குணப்படுத்தப்பட்டனர். ஆனால் அதன்பின் மீண்டும் அங்கு வைரஸ் தாக்கியது. தற்போது இந்த வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது. இத்தாலி சென்றுவிட்டு வந்த குடும்பம் ஒன்றால் இந்த வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

தீவிரம்
இந்த வைரஸை கட்டுப்படுத்த கேரளா தீவிரமாக முயன்று வருகிறது. முக்கியமாக நோய் அறிகுறிகள் இருக்கும் 1900 பேரை அம்மாநில அரசு தனிமைப்படுத்தி உள்ளது. இதில் 1750 பேர் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஜிபிஎஸ் போன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்பதால் அவர்கள் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.

இன்னொரு பக்கம்
அதேபோல் அங்கு பிரேக் தி செயின் என்ற பிரச்சார முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறி உள்ள எல்லோரையும் மருத்துவமனையில் விரைவில் சேர்க்க வசதியாக, இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதேபோல் கொரோனா அறிகுறி குறித்தும், தற்காப்பு குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
|
ரோபோ எப்படி
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல பொது இடங்களில் ரோபோக்களை களமிறக்கி உள்ளது. இந்த ரோபோக்கள் மூலம் கேரளாவில் பல இடங்களில் கை கழுவ பயன்படும் கிருமி நாசினிகள் அளிக்கப்படுகிறது. மக்களுக்கு இது இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் இருக்கும் சிஸ்டம் மூலம், மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த ரோபோ கொரோனா குறித்த அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தெரிவிக்கும்.

வேறு என்ன
துபாயில் சில நாட்கள் முன் மனிதர்கள் மூலம் கிருமி நாசினிகள் அளிக்கப்பட்டது பெரிய சர்ச்சையானது. கேரளா அரசு ஏற்கனவே ஜிபிஎஸ் மூலம் மக்களை கண்காணிக்கும் நிலையில் தற்போது ரோபோக்களை களமிறக்கி உள்ளது. ஏற்கனவே ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிரமான சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. கேரளா கொரோனாவை தடுப்பதில் மற்ற மாநிலங்களை விட வேகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு இதனால் மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications