இத்தாலி சென்றதை மறைத்தனர்.. கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா.. 3000 பேருடன் தொடர்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகி வருகிறது.
Recommended Video
கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
பத்தினம்திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி வந்தது
ஏற்கனவே 3 பேருக்கு கேரளாவில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. தற்போது கூடுதலாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இதனால் தீவிரமாக பணிகளை முடிக்கிவிட்டுள்ளார். அங்கு மீண்டும் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஒரே குடும்பம்
இவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மூன்று பேரும் கடந்த மாதம் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள். இதில் அவர்கள் இத்தாலிக்கு சென்று உள்ளனர். இத்தாலியில் பல்வேறு பகுதிகளை அவர்கள் பார்வையிட்டுள்ளனர். இத்தாலியில் அப்போது வைரஸ் தீவிரமாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

சொல்லவில்லை
ஆனால் கொச்சி விமான நிலையம் வந்த போது அவர்கள் இத்தாலி சென்ற விஷயத்தை தெரிவிக்கவில்லை. இத்தாலி சென்றதை இவர்கள் தெரிவிக்காத காரணத்தால் இவர்களை அங்கு சோதனை செய்யாமல் அனுமதித்து உள்ளனர். இதனால் அவர்களுக்கு கொரோனா இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் வீட்டிற்கு வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல்
அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னும் இருவருக்கும் இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் கேரளாவில் மிக கண்டிப்புடன் சோதனைகள் நடந்தும் கூட, 5 பேருக்கு புதிதாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடந்த இரண்டு வாரத்தில் 3000 பேரை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் சோதனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications