"லிவிங் டூ கெதர்".. பெண் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தற்கொலை.. மாடியில் சடலமாக தொங்கிய ஆண் நண்பர்.. பரபரப்பு
கேரளாவில் டப்பிங் ஆர்ட்டிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம்: கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த ஆண் - பெண் இருவருமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் தொற்று தலைவிரித்தாடுகிறது.. தினந்தோறும் கொரோனா கேஸ்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. அதற்கேற்றார்போல மரணங்களும் அதிகரித்தபடியே வருகின்றன.
எத்தனையோ கட்டுப்பாடுகளை போட்டும்கூட, இயல்பு நிலைக்கு இந்தியாவால் வர முடியாத நிலைமை உள்ளது.. இதனால் மத்திய மாநில அரசுகளே கையை பிசைந்து நிற்கின்றன.

சிக்கல்
இப்படி ஒரு ஆபத்தான சூழலில் நாம் சிக்கியிருந்தாலும் வன்முறை சம்பவங்கள் குறைவே இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.. கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள், பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.. இதுபோக தற்கொலைகளும் பெருகி கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் கேரளாவிலும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது..!

டப்பிங்
ஆலப்புழா அருகே சேர்த்தலா என்ற பகுதி உள்ளது... இங்கு வசித்து வந்த பெண்மணி ரூபி பாபு.. 35 வயதாகிறது.. இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.. ஏராளமான மலையாள படங்களுக்கு பின்னணி குரல் தந்துள்ளார்.. இவருடைய ஆண் நண்பர் பெயர் சுனில்.. அவருக்கு 45 வயதாகிறது. திருவனந்தபுரம் வஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர்.

பாங்கப்பாறை
இருவருமே காதலித்து வந்தனர்.. ஆனால் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.. பாங்கப்பாறையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.. இந்நிலையில் நேற்றிரவு சுனில், தன்னுடைய நண்பருக்கு போன் செய்து, "ரூபி தூக்கு போட்டு கொண்டு இறந்து விட்டாள்.. நானும் சாக போகிறேன்" என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்.

பெட்ரூம்
போலீசாரும் விரைந்து வந்தனர்.. ரூபியின் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது பெட்ரூமில் ரூபியின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. பின்னர் முதல் மாடிக்கு விரைந்து சென்றால், சுனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. கீழ்த்தளத்தில் ரூபி, முதல் தளத்தில் சுனில் என இருவருடைய சடலங்களையும் போலீசார் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரபரப்பு
வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ரூபியின் கழுத்தை இறுக்கியிருந்த கயிறு அறுக்கப்பட்டுள்ளதாம்.. இவர்கள் 2 பேருமே எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், இவர்களின் அடுத்தடுத்த தற்கொலைகளால் ஆலப்புழா பகுதியே அரண்டு போயுள்ளது.. விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications