வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து CPI ஆனி ராஜா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- தமிழக மருமகள்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI, சி.பி.ஐ.) வேட்பாளராக ஆனி ராஜா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா.
லோக்சபா தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வருகின்றன. இதனால் கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் இடையேதான் போட்டி. இம்மாநிலத்தில் பாஜகவும் களம் காண்கிறது.

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது 4 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
சிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனிராஜா, வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில்
பன்னியன் ரவீந்திரன், திரிசூரில் விஎஸ் சுனில் குமார், மாவேலிக்கரா லோக்சபா தொகுதியில் அருண்குமார் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனிராஜா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு லோக்சபா தொகுதியில் 2019- தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. இத்தொகுதியில் மொத்தம் 64.94% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் பிபி சுனீர் 25.24% வாக்குகளைப் பெற்றார்.
யார் இந்த ஆனி ராஜா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா (அன்னி ராஜா, ஆன்னி ராஜா). கேரளாவின் கண்ணூரை பூர்வீகமாக கொண்டவர் ஆனி ராஜா. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஆனி ராஜாவின் கணவர் டி. ராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அந்த வகையில் ஆனி ராஜா தமிழ்நாட்டு மருமகள். கடந்த ஆண்டு திமுக எம்பி கனிமொழி முன்னின்று நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்றவர். தமிழ்நாட்டில் இடதுசாரிகள் இயக்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறவர் ஆனிராஜா. வயநாடு லோக்சபா தொகுதியில் ஆனி டி.ராஜா களமிறங்குவதால் ராகுல் காந்திக்கு கடும் போட்டி இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications