தொடரும் மர்மம்.. கேரளாவில் அடுத்தடுத்து மரணங்கள்.. உயிரிழந்த திருநங்கை அனன்யாவின் காதலனும் தற்கொலை
திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் திருநங்கை RJஆக அறியப்படும் அனன்யா குமாரி அலெக்ஸ் உயிரிழந்த சில நாட்களிலேயே, இப்போது அவரது பார்ட்னரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ். நாட்டிலேயே முதல் திருநங்கை RJஆக அறியப்படும் இவர், சமூகப் பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்,
28 வயதான அனன்யா குமாரி அலெக்ஸ், கேரள சட்டசபைத் தேர்தலில் DSJP எனப்படும் டெமோக்ரடிக் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக வேட்பு மனு செய்திருந்தார்.

அனன்யா குமாரி அலெக்ஸ்
கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார், அவருக்கு ஆதரவாகப் பலரும் இருந்த போதிலும், கட்சிக்குள்ளேயே சிலர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். மேலும், கொலை மிரட்டல்களும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடாமல் விலகினார். இதற்குக் கட்சிக்குள் நிலவியே உள்கட்சி மோதலே காரணம் எனக் கூறப்பட்டது..

பார்ட்னர் தற்கொலை
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், எடப்பல்லியில் உள்ள வீட்டில் அனன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாகக் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அவரது பார்டனர் ஜிஜு ராஜ்வும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது
அனன்யாவின் மரணத்திற்குப் பிறகு, ஜிஜு ராஜ் மிகவும் சோகமாகவே இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அனன்யா தற்கொலை குறித்து அவரிடமும் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது. அனன்யாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஜிஜூ ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருவனந்தபுரத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். இங்கு தான் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெற்றோர் புகார்
அனன்யா குமாரியின் உயிரிழந்த சில நாட்களிலேயே அவரது பாட்டரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனன்யா குமாரியின் மரணம் குறித்தே பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அனன்யா கடந்த ஆண்டு gender reassignment surgery எனப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக அந்த ஆப்ரேசன் பின்னர் அவர் மோசமான பாதிப்பை எதிர்கொண்டாதவும் அனன்யாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications