மரண தண்டனை.. ஷாரோன் ராஜை கொன்ற பின் காதலி கிரீஷ்மா போட்ட நாடகம்.. போலீஸ் எப்படி பிடித்தார்கள்?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாறசாலையில் காதலன் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு இன்று நீதிமன்றம் அதிரடியாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. உடந்தையா இருந்த கிரீஷ்மாவின் மாமாவுக்கு நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் கிரீஷ்மா போலீசாரை ஏமாற்ற நாடகமாகடியது எப்படி? போலீசார் எப்படி அவரை கைது செய்தனர்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம் நாட்டில் சமீபகாலமாக காதலன், காதலியையும், காதலி, காதலனையும் திட்டமிட்டு கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் லிவ் இன் ரிலேஷன்ஷிப் ஜோடிகளும் தங்களின் இணையர்கள் மூலம் கொலை செய்யப்படும் சம்பவங்கள் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இது பெரும் சோகம் என்றால் கொலை செய்ய அவர்கள் வகுத்த திட்டம், கொலை செய்த பின் அதனை மறைக்க போடும் நாடகம் உள்ளிட்ட தகவல்கள் நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நாட்டையை உலுக்கி ஒரு கொலை சம்பவம் என்றால் அது கேரளாவை சேர்ந்த 25 வயது நிரம்பிய ஷாரோன் ராஜ் கொலை தான்.
இந்த வழக்கில் ஷாரோன் ராஜை கொலை செய்த அவரது 22 வயது காதலி கிரீஷ்மாவுக்கு இன்று நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (25). இவர் குமரி மாவட்டம், நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி ஷாரோன் ராஜ் வயிற்று வலியால் திருவனந்தபுரம் அரசு மருத்துவ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாள் சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஷாரோன் ராஜை, காதலி கிரீஷ்மா தனது வீட்டிற்கு வரவழைத்து காஷாயம் எனக்கூறி ஜுஸில் விஷம் கலந்து குடிக்க வைத்ததும், அதுதான் அவரது இறப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது.
கிரீஷ்மாவுக்கு அவருடைய தாய் சிந்துவும் தாய்மாமா நிர்மல் குமாரும் நல்ல வசதி கொண்ட மாப்பிள்ளையை பார்த்துள்ளனர். அவரை கரம்பிடிப்பதற்காக கரீஷ்மாக திட்டமிட்டு காதலன் ஷாரோன் ராஜை தீர்த்து கட்டியதும் அம்பலமானது. இந்த வழக்கு நெய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று கடந்த 18 ம் தேதி கிரீஷ்மாவும், விஷம் வாங்கிக் கொடுத்த தாய்மாமா நிர்மல் குமாரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இன்று தண்டனை விபரத்தை நீதிமன்றம் வழங்கியது. அதன்படி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், அவரது தாய்மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கிரீஷ்மா சிக்கியது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம். அதாவது மருத்துவமனையில் ஷாரோன் ராஜ் இறந்த பிறகு போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று தான் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஷாரோன் ராஜ் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் ஒரு விஷயத்தை தெரிவித்து இருந்தார். அதாவது கிரீஷ்மா தனக்கு ஆயுர்வேத கஷாயம் என்று கூறி ஜுஸ் ஒன்றை தந்தார்.
அதனை குடித்த பிறகு தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனாலும் காதலி மீது எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. அவர் என்னை கொல்ல வேண்டும் என்று நினைத்து இருக்க மாட்டார் என்று கூறியிருந்தார். அதேபோல் கிரீஷ்மாவை சந்தித்துவிட்டு வீடு வரும்போதெல்லாம் ஷாரோன் ராஜ் மிகவும் சோர்வாக இருப்பார் என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்ததோடு, காதலி கிரீஷ்மா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தான் வழக்கு பாறசாலை போலீசாரிடம் இருந்து குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் காதலி கிரீஷ்மாவை பிடித்து விசாரித்தனர். அப்போது கிரீஷ்மா போலீசாரை ஏமாற்ற முயன்றார். அதாவது கஷாயம் என்று வழங்கப்பட்ட ஜுஸை ஷாரோன் ராஜ் மட்டும் குடிக்கவில்லை. அவர் குடித்த அதேநாளில் இன்னொரு ஆட்டோ டிரைவரும் குடித்தார். தற்போது அவர் நலமாக உள்ளார். அதோடு நான் விஷத்தை கொடுக்கவில்லை.
டாக்டர் பரிந்துரையின்பேரில் முதுகு வலிக்கான ஆயுர்வேத கஷாய ஜுஸ் தான் வாங்கி கொடுத்தேன். கஷாயம் வாங்கிய கடையின் முகவரியை கேட்டபோது அந்த கடை தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த கடையின் புதிய முகவரி தெரியவில்லை என்று கூறினார். அதேபோல் அவர் கூறிய டாக்டர் ஒருவரிடம் கேட்டதற்கு கிரீஷ்மாவுக்கு தான் எந்த மருந்து, கஷாயம் உள்ளிட்டவற்றை பரிந்துரைக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் கிரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிரீஷ்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதாவது ஷாரோன் ராஜை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றதை கிரீஷ்மா ஒப்புக்கொண்டார். அதாவது கஷாயம் என்ற பெயரில் ஜுஸில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்ததாக தெரிவித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதேபோல் உடந்தையாக இருந்த தாய்மாமா நிர்மல் குமாரும் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி திருவனந்தபுரம் புறநகர் எஸ்பி டி ஷில்பா கூறுகையில், ‛‛கிரீஷ்மாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார். ஆனால் டிஜிட்டல் எவிடென்ஸ் எங்களிடம் இருந்தது. இந்த ஆதாரங்கள் வழக்கிற்கு உதவியது. சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்களின் விசாரணையில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டது'' என்றார்.
இதுபற்றி விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த துணை எஸ்பி ரஷித் கூறுகையில், ‛‛இந்த வழக்கில் போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. விசாரணை தாமதப்படுவதாக பலரும் விமர்சனம் செ்தனார். கிரீஷ்மா நன்றாக படிக்கும் மாணவி. அதோடு அவர் கூறிய தகவலை மீண்டும் மீண்டும் கூறி ஷாரோன் ராஜை கொலை செய்யவில்லை என்று கூறிவந்தார். ஆனால் ஆதாரங்கள் அடிப்படையில் விசாரித்து உண்மையை கண்டுபிடித்து தண்டனை பெற்று கொடுத்துள்ளோம்'' என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications