கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் ஆறுதல் செய்தி கொடுத்த மத்திய அரசு! பின்னணி
டெல்லி: ஏமன் நாட்டில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள நர்சுக்கு மரண தண்டனை விதிக்கபப்ட்டது. இந்த வழக்கில் மரண தண்டனையை நிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் 19 வயதில் நர்சிங் வேலை தேடி ஏமன் நாட்டுக்கு சென்றார். பின்னர் ஏமனில் ஒரு கிளினிக் தொடங்கினார். ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து இந்த கிளினிக்கையை தொடங்கினார்.

மரண தண்டனை விதிப்பு
இதில் ஏற்பட்ட தகராறில், நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டார். அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை கைப்பற்ற நிமிஷா பிரியா, அப்தோ மஹ்திக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். ஆனால் இந்த மயக்க ஊசி ஓவர்டோஸ் ஆனதால் தலால் அப்தோ மஹ்தி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் கைதான நிமிஷா பிரியா 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிவில் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனையை ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியானது.
தண்டனை நிறுத்தி வைப்பு
நிமிஷா பிரியாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் ஏமனில் ஹவுதி எனும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மத்திய அரசின் முயற்சிகளுக்கு பலன் கிடைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பினரின் முயற்சிகளை தொடர்ந்து, கடைசி நேரத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏமன் நாட்டு சட்டப்படி கொலை வழக்கில் கைதாகும் நபர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க ரத்தப்பணம் வழங்கலாம். அதன்படி நிமிஷா பிரியா தரப்பில் ரூ.11 கோடி வரை ரத்தப்பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் கொலையான தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினர் அந்த பணத்தை ஏற்கவில்லை. இதனால் நிமிஷா பிரியா விடுதலை ஆகுவதில் சிக்கல் நீடிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே, நிமிஷா பிரியா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, நிமிஷாவை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், 'தண்டனை நிறைவேற்றும் விவகாரத்தில் என்ன நடந்தது?' என்ற கேள்வியை முன்வைத்தனர். அப்போது நிமிஷா பிரியாவுக்கு சட்ட உதவி அளித்து வரும் அமைப்பான 'நிமிஷா பிரியாவை பாதுகாக்கும் சர்வதேச நடவடிக்கை கவுன்சில்' தரப்பு வழக்கறிஞர், "தண்டனை நிறைவேற்றுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறினார்.
எதுவும் பாதகமாக நடக்கவில்லை
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, இந்த விவகாரத்தில் புதிய மத்தியஸ்தர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஒரே நல்ல விஷயமாக, எதுவும் பாதகமாக நடக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரிக்கு ஒத்திவைத்தனர். அதே நேரம், முன்கூட்டியே விசாரணை தேவை என்றால் மனுதாரர்கள் முறையிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications