கேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு 174 பயணிகள், 6 விமான படை ஊழியர்கள் என மொத்தம் 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்தது.

ரன்வேயில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் தரையிறங்கும் முயற்சி முதலில் தோல்வி அடைந்தது. பின்னர் சிறிது நேரம் பறந்தபடியே இருந்த விமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தது.
அப்போது வழுக்கி விழுந்த விமானம் ரன்வேயை தாண்டி 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. விமானத்திலிருந்து நெருப்பும் புகையும் வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த விபத்தில் விமானி கேப்டன் தீபக் சாத்தே, துணை விமானி அகிலேஷ் ஆகியோர் பலியாகிவிட்டனர்.

இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் பலியாகிவிட்டனர். அதில் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர். மலப்புரத்தைச் சேர்ந்த ஷாஹீர் சயிது (36), பாலக்காட்டை சேர்ந்த முகமது ரியாஸ் (35), மலப்புரத்தைச் சேர்ந்த லைலாபி (51), கோழிக்கோட்டை சேர்ந்த ஜானகி (54), கோழிக்கோடு மாவட்டம் பிலச்சேரியைச் சேர்ந்த அயானா ரவிசங்கர் (4), சரஃபுதீன், மலப்புரத்தைச் சேர்ந்த ராஜீவன், வெல்லமடுகுன்னு பகுதியைச் சேர்ந்த 10 மாத குழந்தையான அப்சல் முகமது, 45 வயது பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டவர்கள் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 123 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications