Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூமுக்குள் இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்ற நபர்.. திடீரென வந்த அந்த சத்தம்.. அடுத்து நடந்த ஷாக்

மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சாப்பிட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணை, தரதரவென இழுத்து சென்று ரூமில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார் ஒரு இளைஞர்.. அத்துடன் தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதவன்.. கண்ணூர் போக்குவரத்துத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் பீனா.. ஸ்கூல் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களது மகள் மானஷா.. 24 வயதாகிறது..

கொச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் பல் மருத்துவராக படித்து வந்தார்.. தோழிகளுடன் காலேஜ் பக்கத்திலேயே ஒரு ரூம் எடுத்து தங்கி வந்தார்..

 சாப்பாடு

சாப்பாடு

இந்நிலையில், நேற்று மதியம் 3 மணி அளவில், ராஹில் என்பவர் மானஷா ரூமுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.. தலசேரியை அடுத்த மேலூரை சேர்ந்த அவருக்கு 32 வயதாகிறது... ரூமில் நுழைந்த நேரம், மானஷா அவருடைய 3 தோழிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. ராஹிலை பார்த்ததுமே அதிர்ந்து போன மானஷா, இங்கு ஏன் வந்தாய் என்று கேட்டுள்ளார்..

மானஷா

மானஷா

ஆனால், ராஹில், மானஷாவை பிடித்து, அருகில் இருந்த இன்னொரு ரூமுக்குள் இழுத்து சென்றார்.. இதை பார்த்து பதறிய மற்ற தோழிகள், அங்கிருந்து அலறியடித்து கொண்டு, அந்த வீட்டின் ஓனரிடம் இதை பற்றி சொல்ல ஓடினர்.. ஆனால், அதற்குள் மானஷா ரூமில் இருந்து திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.. இதனால் மேலும் அலறிய தோழிகள், ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர்..

 மாணவிகள்

மாணவிகள்

அப்போது, மானஷாவும், ராஹிலும் 2 பேருமே ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு கதறினர். இந்த சத்தங்களை கேட்டு, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் 2பேருமே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

தற்கொலை

தற்கொலை

இதையடுத்து கோதமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. 2 சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. கொலை நடந்த வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.. அப்போது, கீழே விழுந்து கிடந்த கைத்துப்பாக்கியையும் கைப்பற்றினர்... மானஷாவின் மார்பின் கீழ் பகுதியிலும், தலையிலும் என 2 இடங்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன. ராஹில் தன்னுடைய தலை பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளது தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

மானஷாவும், ராஹிலும் இன்ஸ்டாகிராமில் பழக்கமானார்களாம்.. ஒருகட்டத்தில் ராஹிலின் போக்கை மானஷா விரும்பவில்லை.. அதனால் மெல்ல மெல்ல பேச்சை குறைத்துள்ளார்.. இது ராஹிலுக்கு எரிச்சலை தந்துள்ளது.. விடாமல் லவ் டார்ச்சர் தந்துள்ளார்.. ஒருகட்டத்தில் ராஹில் தொல்லை அதிகரிக்கவும், வீட்டில் தன் பெற்றோரிடம் சொல்லி உள்ளார் மானஷா.. இதை கேட்டு அதிர்ந்த மானஷாவின் அப்பா மாதவன், கண்ணூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. போலீசாரும் ராஹிலை விசாரித்து வார்ன் செய்து அனுப்பிவிட்டனர்.

 ஆத்திரம்

ஆத்திரம்

இதுதான் ராஹிலுக்கு ஆத்திரத்தை மேலும் அதிகமாகி உள்ளது.. கடந்த 4-ம் தேதி, நெல்லிக்குழிக்குச் சென்று லாட்ஜில் ரூம் தங்கி, மானஷாவின் வீடு, நடவடிக்கைகளை கண்காணித்தபடியே இருந்துள்ளார்.. மானஷா சாப்பிடும் நேரம் தெரிந்ததும், துப்பாக்கியுடன் அங்கு சென்று கொலை செய்துவிட்டு, தன்னையும் சுட்டு கொண்டு இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.. அந்த கைத்துப்பாக்கியை ராஹில் எங்கே எப்படி வாங்கினார் என்ற தகவலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+