"ரெட்டை வால் குருவி".. 1 பொண்ணு + 2 பையனை பார்த்ததுமே அரண்டு போன ஆபீசர்கள்.. ரொம்ப குழப்பமா இருக்கே
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு விநோத சம்பவம் நடந்துள்ளது.. அத்துடன் மிகுந்த குழப்பத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தி வரும்நிலையில், அதுகுறித்த விசாரணையை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது கொல்லத்தில்?
கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய அனுமதி தரப்படும். இதுதான் அங்கு நடைமுறை.

கொல்லம்: இப்படிப்பட்ட சூழலில், கொல்லம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்ணின் ஆசை, கேரளாவில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆசைப்பட்டதுடன் நிற்காமல் இரண்டு இளைஞர்கள் வசிக்கும் முகவரிக்குட்பட்ட ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் திருமணம் செய்துகொள்ள மனுவும் அளித்திருக்கிறார் அந்த இளம்பெண்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இந்த பெண், பத்தனாபுரம் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு சென்று, "சிறப்பு திருமண சட்டத்தின் கீழ்" பத்தனாபுரத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வதற்காக மனு தந்திருந்தார்..
இளம்பெண்: அதேபோல, புனலூர், உறுகுந்நு பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞரையும் திருமணம் செய்வதற்காக புனலூர் ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அதே இளம்பெண் மனு அளித்திருக்கிறார்... அதாவது, 2 ஆண்களையுமே திருமணம் செய்ய வேண்டும் என்று மனு தந்துள்ளார்.
ஒரே இளம்பெண், இரண்டு இளைஞர்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள, இரண்டு ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் மனு தந்திருப்பது அதிகாரிகளின் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.. வழக்கமாக, திருமண விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், இந்த விஷயம் தெரியவந்துள்ளது.. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாப்பிள்ளை பெயரை திரும்ப திரும்ப சரிபார்த்தனர்.. ஆனாலும் 2 ஆண்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதிர்ச்சி: இதனை கண்டறிந்த புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பிறகு, வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து, விவரம் கேட்பதற்காக அந்த பெண்ணை பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரவழைத்திருந்தனர்.
அதன்படியே அந்த பெண், புனலூரை சேர்ந்த இளைஞருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் தந்தார்.. அதாவது, புனலூரை சேர்ந்த இளைஞருடன் நீண்ட நாட்களாக லிவிங் டுகெதர் உறவில் இந்த பெண் இருந்து வந்தாராம்.. அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த இளைஞரிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார்..
பத்மநாபுரம்: அந்த நேரத்தில்தான், அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.. அந்த இளைஞர் ஒரு வெள்ளை பேப்பரில், தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலக தரப்பில், அந்த பெண் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை என்கிறார்கள்.. அந்த பெண் சொல்லும் 2 ஆண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும், இதற்காக பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வருமாறும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் குழப்பம்: ஒருவேளை, ஒரே பெண் இரண்டு இளைஞர்களை காதலிப்பதால், இப்படி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தாரா? அல்லது இரண்டு இளைஞர்களின் சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்தாரா? என்பதெல்லாம் தெரியவில்லை. உண்மையிலேயே இந்த சம்பவம் மிகுந்த குழப்பத்தை அதிகாரிகள் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளதாம்.. அதனால்தான், அந்த இளம்பெண்ணையும், 2 இளைஞர்களையும், நேரில் அழைத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications