திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடவுள் தேசத்தில் ஒரு மர்ம தேசம்.. வயநாட்டில் பயங்கரம்.. பேய் பயம் இருக்கிறவங்க! இதை படிக்காதீங்க!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கடவுள் தேசத்தில் ஒரு மர்ம தேசம் உள்ளதை நீங்கள் அறிவீர்களா? ஆம் வயநாட்டில் சங்கிலி மரம் என்ற ஒன்று இருக்கிறது, இதில் தான் அத்தனை மர்மங்கள் அடங்கியுள்ளன.

கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவை கடவுளின் தேசம் என அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட கடவுளின் தேசத்தில் ஒரு மர்ம தேசம் இருக்கிறது.

வயநாட்டில் லக்கிடி என்ற இடத்தில் தாமரச்சேரி காட் முடிச்சு எனும் இடத்தில் ஒரு சங்கிலி மரம் உள்ளது. கேரளாவில் உள்ள இந்த இடத்தை பற்றி நீங்கள் வேறு எங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

சங்கிலி மரம்

சங்கிலி மரம்

இங்கு இருக்கும் சங்கிலி மரத்தில், மரம் வளர வளர சங்கிலியும் பெரிதாகி வருவதாக சொல்கிறார்கள். இதற்கான பகீர் பின்னணியை பார்ப்போம். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். இதை நாம் அறிவோம். அவ்வாறு ஆட்சி செய்யும் போது கள்ளிக்கோட்டையிலிருந்து (Calicut)வயநாடு செல்ல ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் குறுகிய நேரம் கொண்ட பாதையை தேடி வந்தார்.

கப்பலில் கள்ளிக்கோட்டை

கப்பலில் கள்ளிக்கோட்டை

அதாவது கப்பலில் கள்ளிக்கோட்டையை அடையும் வியாபாரிகள் மூலம் இந்தியாவுக்குள் வாணிபத்தை ஏற்படுத்த இந்த குறுகிய காலத்தில் வயநாட்டை அடைய வழி தேவைப்பட்டது. இதற்காக அந்த பொறியாளர், கரிந்தண்டன் எனும் பழங்குடியின தலைவரை அணுகினார். அவர்தான் தற்போது சங்கிலி மரம் இருக்கும் வழியை கண்டுபிடித்து கொடுத்தார்.

பழங்குடியினர்

பழங்குடியினர்

அவர் வயநாட்டை சேர்ந்தவர். பழங்குடியினர் என்பதால் அவருக்கு அனைத்து சந்து பொந்துகளும் அத்துபடி!. இந்த நிலையில் வழியை கண்டுபிடித்ததற்கான நற்பெயரை கரிந்தண்டன் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவர் அநியாயமாக வெள்ளைக்கார பொறியாளரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மலை உச்சி

மலை உச்சி

ஏதோ ஒரு மலை உச்சியில் கரிந்தண்டனை வைத்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து கரிந்தண்டன் கண்டுபிடித்து கொடுத்த வழியில் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இதனால் அப்பகுதி மக்கள் ஒரு பூசாரியை வரவழைத்து அவரிடம் விஷயத்தை சொன்னார்கள்.

பூசாரி

பூசாரி

அப்போது அந்த பூசாரி அந்த மரத்தில் கரிந்தண்டனின் ஆவி இருப்பதாக கூறி அதை கட்டுப்படுத்த சங்கிலியை மரத்தை கட்டினார். அன்று முதல் மரம் வளர வளர சங்கிலியும் வளர்ந்து கொண்டே வருகிறது. பொதுவாக மரம் வளர வளர அதன் அடர்த்தியால் சங்கிலி தானாகவே துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் . ஆனால இங்கு சங்கிலியும் வளர்கிறது. லக்கிடியிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் இந்த சங்கிலி மரம் இருக்கிறது.

மரத்துடன் சங்கிலியும் வளர்கிறது

மரத்துடன் சங்கிலியும் வளர்கிறது

கரிந்தண்டன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பழங்குடியின அமைப்பினர் பேரணியை நடத்துகிறார்கள். அந்த பேரணிக்கு கரிந்தண்டன் ஸ்மிரிதி யாத்ரா. மர்மங்கள் நிறைய அந்த சங்கிலி மரத்தை காண ஆவலாக இருக்கிறீர்களா? ஆமாவா, செம தில்லுதான் பாஸ் உங்களுக்கெல்லாம்!

English summary
Kerala Unknown Tourist spot: The mysterious chain tree as tree grows the chain also grows in Wayanad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X