யாருனு பாருங்க.. அத்தனை பேர் சுற்றி நிற்க.. நடுவிலே நின்று.. அட மாரியம்மா.. நடுநடுவே "முத்தம்" வேற
திருவனந்தபுரம்: போலீஸ்காரர் ஒருவர் டியூட்டி நேரத்தில் செய்த காரியம், எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது பாருங்க.. தன்னையே மறந்து செய்த அந்த காரியத்தினால், அசிங்கப்பட்டு போயுள்ளார் போலீஸ்காரர்.. என்ன நடந்தது?
2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்கு போலீஸாக வேலை பார்ப்பவர் ஷிகாப்.. 38 வயதாகிறது.. சப் இன்ஸ்பெக்டரான இவர், ஒருநாள் நைட் ஷிப்ட் முடித்துவிட்டு, விடிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்..

பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ரோட்டோரத்தில் மாம்பழங்கள் சாக்கு பைகளில் குவிக்கப்பட்டிருந்தன.. அதாவது வியாபாரம் செய்வதற்காக, முன்கூட்டியே அங்கு மாம்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மாம்பழம் மாம்பழம்: பைக்கில் வந்து கொண்டிருந்த ஷிகாத்தின் மூக்கை துளைத்து கொண்டு போனது மாம்பழ வாசனை. அப்போதுதான் அங்கிருந்த மூட்டைகளை கவனித்தவர், சுற்றுமுற்றும் பார்த்தார்.. உரிமையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பதால், பைக்கை நிறுத்திவிட்டு, மாம்பழங்களை அள்ள போனார். ஆனால், அங்கிருந்த இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அந்த போலீசார் கவனிக்கவில்லை.. பைக்கை, மாம்பழக்கூடைகளுக்கு அருகே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, விறுவிறுவென அங்கிருந்த மாம்பழங்களை திருடி பைக்கின் சீட்டுக்கு அடியில் போட்டார்...

மாம்பழங்கள்: இப்படியே 10 கிலோ மாம்பழங்களை திருடி போட்டுவிட்டு, ஒருவழியாக மனம் திருப்தியானதும், அங்கிருந்து கிளம்பினார்.. மறுநாள் காலையில் வந்து பார்த்த வியாபாரிகள், மாம்பழங்கள் திருடுபோனது குறித்து போலீஸுக்கு புகார் தரவும்தான், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஷிகாப் வசமாக சிக்கிக் கொண்டதார். அதற்குள் இந்த சிசிடிவி காட்சி சோஷியல் மீடியாவில் பரவிவிடவும், உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்தது காவல்துறை.. இந்த விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு சம்பவம் அதே இடுக்கியில் நடந்துள்ளது.. அங்குள்ள பூப்பாறை என்ற ஒரு அம்மன் கோயில் உள்ளது..

மாரியம்மா மாரியம்மா: இது சுற்றுவட்டாரத்தில் புகழ்பெற்ற கோயில் என்பதால், இங்கு நேற்று முன்தினம் திருவிழா நடந்துள்ளது.. ளஇந்த திருவிழாவுக்கு சந்தன்பாறை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.. திருவிழா என்பதால் அந்த பகுதியே ளகலகலப்பாக இருந்துள்ளது.. அப்போது ஷாஜி என்ற சப் இன்ஸ்பெக்டர் டியூட்டியில் இருந்துள்ளார்.. திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்.. இவர் மது அருந்தும் நேரத்தில், அங்கே கோயிலில், "கரகாட்டக்காரன்" படத்தில் வரும் "மாரியம்மா.. மாரியம்மா, திரிசூலியம்மா நீலியம்மா".. என்ற பாட்டு வந்துள்ளது..

அந்த பாட்டை கேட்டதுமே, மேலும் உற்சாகமான ஷாஜி, டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார்.. கோயில் பாதுகாப்புக்காக டியூட்டிக்கு வந்தவர், போலீஸ் டிரஸ்ஸிலேயே தண்ணி அடித்ததுடன், அப்படியே ஒரு ஆட்டமும் போட்டுள்ளார்.. இதை பார்த்த பொதுமக்களும், பக்தர்களும் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டவும், மறுபடியும் இந்த வீடியோ கேரள காவல்துறையில் சலசலப்பை கூட்டியது.. அப்புறமென்ன? மாரியம்மா ரூபத்தில் ஷாஜிக்கு தேடி வந்தது ஷாக் தகவல்.. இப்போது ஷாஜியும் சஸ்பெண்ட்தான்..!!
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications