"விஸ்மயா".. 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், கார் தந்தும்.. வரதட்சணை கொடுமை.. கேரளாவை உலுக்கிய கொலை!?
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த விஸ்மயா வி நாயர் என்ற 24 வயது பெண் தனது கணவர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த மரணம் குறித்து கேரள ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் பல அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளன.
கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த விஸ்மயா, கொல்லம் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ் கிரண் குமார் என்ற நபரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020 மார்ச்சில் இவர்களுக்கு இடையே திருமணம் நடந்தது. வீட்டில் சம்பந்தம் பேசி, குடும்பத்தார் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி உள்ளனர். இந்த திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

வரதட்சணை
இந்த நிலையில் தொடக்கத்தில் விஸ்மயா - கிரண் தம்பதியினர் சந்தோஷமாகவே இருந்துள்ளனர். ஆனால் போக போக கிரண், விஸ்மயாவை அடிப்பதும் உதைப்பதுமாக கொடுமைப்படுத்தி உள்ளார். எனக்கு கொடுத்த காரை விற்றுவிடுங்கள். அதற்கு பதிலாக எனக்கு பணம் கொடுங்கள். 10 லட்சம் வேண்டும், 20 லட்சம் வேண்டும் என்று தினமும் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார்.

24 வயது
வெறும் 24 வயதே நிரம்பிய விஸ்மயா தொடக்கத்தில் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருந்திருக்கிறார். ஆனால் போக போக கிரண் கொடூரமாக கட்டைகளை, ஆணிகளை வைத்து முகத்தில் தாக்கி கொடுமைபடுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் விஸ்மயா கிரண் இருவரும் விஸ்மயாவின் வீட்டிற்கு சென்ற போதும், பெற்றோர் முன்னிலையில், குடித்துவிட்டு விஸ்மயாவை கிரண் அடித்துள்ளார்.

மோசம்
இதையடுத்து அப்போதே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, கிரண் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பின் இரண்டு குடும்பமும் சுமுகமாக பேசி, சமரசம் செய்த பின் கிரண் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கணவனுடன் வாழ விருப்பம் இன்றி விஸ்மயா பிறந்த வீட்டிலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில்தான் இரண்டு மாதங்களுக்கு முன் விஸ்மயா தேர்வு எழுத கல்லூரி சென்ற போது, கிரண் நேராக கல்லூரிக்கு சென்று விஸ்மயாவை பிக் அப் செய்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

தாக்குதல்
முதல் ஒரு வாரம் அமைதியாக இருந்த கிரண் மீண்டும் குடித்துவிட்டு விஸ்மயாவை மோசமாக தாக்கி, அடித்துள்ளார். ஆனால் திருமண உறவு முறிய கூடாது என்ற அச்சத்தில் இதை அப்பா, தம்பியிடம் சொல்லாமல் விஸ்மயா அமைதியாக இருந்துவிட்டார். தனது சித்தப்பா மகனிடம் மட்டும் விஸ்மயா தனக்கு நடக்கும் கொடூரங்களை சொல்லி இருக்கிறார்.

முடியவில்லை
எண்டே மொகத்தில் சவட்டி.. ஒத்திரி அடிச்சு (என் முகத்தில் உதைக்கிறார்.. அதிகமாக அடிச்சிட்டார்) என்று சித்தப்பா மகனிடம் மெசேஜ் அனுப்பி விஸ்மயா வருந்தி இருக்கிறார். தன்னை மோசமாக தாக்கிய புகைப்படங்களையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விஸ்மயா வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளார். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார்.

போலீஸ்
இவர் எப்படி பலியானார் என்று தெரியாத நிலையில் விஸ்மயாவின் அப்பா திரிவிக்ரமன் போலீசில் புகார் அளித்துள்ளார். விஸ்மயாவை கிரண்தான் கொடுமைப்படுத்தி கொன்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார். உடலில் மோசமான காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பதால் கண்டிப்பாக இது கொலைதான் என்று போலீசும் சந்தேகிக்கிறது.

கொடுமை வழக்கு
அதோடு இதை வரதட்சணை கொடுமை கொலையாக பதிவு செய்து உள்ளனர். இன்று விஸ்மயாவின் பிரேத பரிசோதனை வர உள்ள நிலையில் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்படும். விஸ்மயா என்ற பெண்ணின் மரணமும், அவர் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்களும் மொத்தமாக கேரளாவை உலுக்கி உள்ளது. கிரண் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கொதிப்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications