அய்யோ! என்னது இது.! கார் ரயில்வே தண்டவாளத்தில போகுது.. தலைக்கேறிய போதையால் கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மது போதையில் காரை ஓட்டி வந்த ஒரு போதை ஆசாமி, குறுக்கு சாலை என ரயில்வே டிராக்கில் காரை ஓட்டிச்சென்ற ஒரு காமெடி நடந்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மதுபோதையில் சிலர் தலைகால் புரியாமல் நடந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்யும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பார்த்து இருப்போம். சில நேரங்களில் நடு ரோட்டில் ரகளை செய்வது.. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வது... பாகுபலியாக தங்களை நினைத்துக் கொண்டு ஓடும் பேருந்தை குறுக்கே புகுந்து நிறுத்துவதாக பில்டப் செய்வது என சினிமா காமெடி காட்சிகளை விஞ்சும் அளவுக்கு மதுப்பிரியர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் சில நேரங்களில் போகிறது.

ஆனால், இதற்கெல்லாம் ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு மதுபோதையில் ரயில்வே டிராக்கில் காரை போதை ஆசாமி ஓட்டிச்சென்ற வினோதம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் இரவு நேரத்தில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சாலையின் குறுக்கே ரயில்வே டிராக் ஒன்றும் இருந்ததால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.
தண்டவாளத்தில் சென்ற கார்: ரயில்வே டிராக்கை கடந்து பல கார்களும் சென்று கொண்டிருந்த போது ஒரே ஒரு கார் மட்டும் திடீரென ரயில்வே டிராக்கை நோக்கி சென்றது. டிராக்கில் தொடர்ந்து 15 மீட்டர் வரை சென்று கார் ஆஃப் ஆகி நின்றது. ரயில்வே டிராக்கில் கார் போவதை பார்த்த அங்கிருந்த கேட் கீப்பர் காரின் பின்னாடியே ஓடினார். சில நிமிடங்களில் அப்பகுதி மக்களும் ரயில்வே டிராக்கில் கார் நிற்பதை வினோதமாக பார்த்தபடி அங்கு கூடினர்.
சாலை என நினைத்து: காரின் டிரைவரை பார்த்த போது மது போதையில் நிலை தடுமாறிக் கொண்டு இருந்தார். இது என்னடா வம்பா போச்சு... என்று தலையில் அடித்துக் கொண்ட ரயில்வே கேட் கீப்பர் நேராக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் விரைந்து வந்து போதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றவரை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "மதுபோதையில் காரை ரயில்வே தண்டவாளத்தில் ஓட்டியவர் கண்ணூர் மாவட்டம் அன்சரகண்டி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷம் என்பவர் ஆவர். சாலை என்று நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது ஜெயபிரகாஷம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது காரை பறிமுதல் செய்து இருக்கிறோம்" என்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்: கடந்த 18 ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயில்வே டிரக்கில் கார் நிற்கும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில ஜாலியாக கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்.
சில நெட்டிசன்களோ மதுபோதையில் இப்படி காரை ஓட்டும் நபர்களால் தான் பாதிக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடப்பதாகவும் அப்பாவி பொதுமக்களின் விலை மதிக்க முடியாத உயிர்களும் போகின்றன. எனவே இது போன்று மது போதையில் காரை ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications