கேரளாவில் 2-வது நாளாக பீதி.. பாலக்காடு திருச்சூரில் இன்றும் நிலநடுக்கம்- ரிக்டரில் 3.0 ஆக பதிவு!
திருவனந்தபுரம்: கேரளாவில் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக இன்று அதிகாலையில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.
கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நேற்று காலை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

திருச்சூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி உட்பட பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. சில இடங்களில் வீடுகள் குலுங்கி இருக்கின்றன. இந்த நில அதிர்வுகள் சில வினாடிகள் நீடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளை நோக்கி ஓடினர்.
இதேபோல பாலக்காடு மாவட்டத்தின் சாலிசேரி, கக்காட்டிரி, திருமிற்றக்கோடு, எழுமங்காடு, குமாரநெல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அங்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த லேசான நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் பதிவாகவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலையிலும் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இன்று அதிகாலை 3.55 மணிக்கு நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீத்இயும் அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications