Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலச்சரிவின் பெருந்துயரில் வயநாடு.. லோக்சபா தொகுதி இடைத் தேர்தலை எப்போது நடத்தும் தேர்தல் ஆணையம்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்; நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கி 400க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டிருக்கும் கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. வயநாடு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

வயநாடு லோக்சா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,42,299 வாக்குகள் (59.69%) பெற்று அபார வெற்றி பெற்றார். ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா 2,80,594 வாக்குகளையும் பாஜகவின் சுரேந்திரன் 1,39,868 வாக்குகளையும் பெற்றனர்.

assembly elections 2024 Election Commission Maharashtra Jharkhand Haryana Jammu Kashmir 2024

லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபர்லி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொண்டார். வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அரசியலில் முதல் முறையாக வயநாடு லோக்சபா தொகுதியில்தான் பிரியங்கா காந்தி களம் காண இருக்கிறார்.

இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-க்கும் அதிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பதே தெரியாமல் போனது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், தற்போதும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மலைகளில் தற்போதும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

assembly elections 2024 election commission 2024

வயநாடு லோக்சபா தொகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவு துயரத்தில் இருந்து அந்த மக்கள் இன்னமும் மீளவில்லை. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அப்பகுதிகளில் வாழவே முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது

இந்த பின்னணியில் இன்று இந்தியத் தேர்தல் ஆணையமானது ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதிகளை மட்டும் அறிவித்தது. வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலை இன்று அறிவிக்கவில்லை. இதனால் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மேலும் சில மாதங்களுக்குப் பின்னரே நடைபெறும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+