எம்புரான்: வில்லனாக இந்துத்துவா தலைவன்- தடை விதிப்பு அச்சம்- பகிரங்க மன்னிப்பு கேட்ட மோகன்லால்!
திருவனந்தபுரம்: மோகன்லால் நடித்த எம்புரான் -லூசிஃபர் பார்ட்-2 திரைப்படத்தில் பிரதான வில்லனாக இந்துத்துவா அரசியல் கட்சித் தலைவனை சித்தரித்திருப்பதால் பெரும் சர்ச்சை வெடித்தது; எம்புரான் திரைப்படத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் எம்புரான் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை கருத்துகளை நீக்குகிறோம்; இந்த காட்சிகளால் ஏற்பட்ட மனவருத்தங்களுக்காக மன்னிப்பு கோருகிறேன் என நடிகர் மோகன்லால் தமது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் மோகன்லால்-பிருத்விராஜ் நடிப்பில் உருவான எம்புரான்-லூசிஃபர் பார்ட் 2 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் பிரதான வில்லனே வட இந்தியாவில் மதவெறியில் ஈடுபடும் இந்துத்துவா கட்சியை சேர்ந்த வில்லன். இந்த வில்லனை மதவெறி தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் இஸ்லாமிய இளைஞன், கிறிஸ்தவரான மோகன்லாலுடன் இணைந்து வீழ்த்துகிறார்.

எம்புரான் திரைப்படம் வெளியானது முதலே, இந்துத்துவா கட்சிகள் இந்த திரைப்படத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. படத்தில் இடம் பெறுகிற மதவன்முறை காட்சிகள் அனைத்தும்- 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகளை நினைவூட்டுவதாகவே இருக்கின்றன என்பது பொதுவான கருத்து. இதனால் எம்புரான் சினிமாவையே தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வந்தன.
இந்த நிலையில் எம்புரான் சினிமா சர்ச்சை தொடர்பாக நடிகர் மோகன்லால் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எம்புரான்-லூசிஃபர் பார்ட் 2-ல் இடம் பெற்றுள்ள சில அரசியல் மற்றும் சமூக காட்சி அமைப்புகள், கருத்துகள் அன்புக்குரியவர்களை காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறேன். ஒரு கலைஞனாக, என்னுடைய திரைப்படங்கள் எந்த ஒரு அரசியல் இயக்கம் அல்லது சித்தாந்தத்துக்கு எதிரான வெறுப்பை முன்னிறுத்துவதாக இல்லை என்பதை நான் உறுதி செய்ய வேண்டும்.

நானும் எம்புரான் திரைப்பட குழுவும், காயங்களுக்கு காரணமான காட்சிகளை நீக்குவது என முடிவு செய்திருக்கிறோம். இந்த காயங்களை ஏற்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.
கடந்த 40 ஆண்டுகால திரைப்படத்தில் உங்களுடன் நான் இணைந்தே நிற்கிறேன். உங்களது அன்பும் நம்பிக்கையும்தான் எனக்கான மிகப் பெரும் பலம். நீங்கள் இல்லாமல் இந்த மோகன்லால் இல்லை. இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications