Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்டிய தனிமை.. பெண்ணுக்கு வயது 59.. மாப்பிள்ளைக்கு 63.. தாய்க்கு 2வது திருமணம் செய்த மகள்.. ஆஹா!

தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார் அவரது மகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனிமையில் தவித்து கிடந்த தன் தாய்க்கு, 2வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார் அவரது மகள்... ஊரெல்லாம் இதே பேச்சாதான் இருக்கிறது..!

Recommended Video

    தில்லாலங்கடி Beauty-யாய் மாறிய பாட்டி....ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி

    இன்றைய நவீன காலகட்டத்தில், காதல் என்ற வலிமையான விஷயத்தை, மலிவாக்கி வருகிறது ஒரு கூட்டம்.. அப்படியே தூய்மையான காதல் என்றாலும், அது தோல்வியாகும்பட்சத்தில், ஒரு காதல் தோற்றுப்போனால், இன்னொரு காதல் மலர்வது இயல்பாகிவிட்டது.

    இந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது என்றாலும், நம் சமூகத்தில் இன்னும் சில கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு தான் வருகின்றன... எழுதப்படாத விதிமுறைகளும் நிலுவையில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

     விதவை + தனிமை

    விதவை + தனிமை

    அந்த வகையில் திருமணமாகி, கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது.. என்னதான் நாகரீகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் பேசினாலும், கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்களுக்கு, இன்னொரு திருமணத்தை இந்த சமூகம் முழுமையாக அங்கீகரிப்பதில்லை.. அந்த பெண்ணின் உணர்வுகளையும் மதிக்காமல், அவரது குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிந்திக்காமல், கண்டும் காணாமல் விலகி செல்லும் போக்கு இன்றும் உள்ளது..

     நாலு சுவர்கள்

    நாலு சுவர்கள்

    அதேபோல, சம்பந்தப்பட்ட பெண்களும், இன்னொரு மறுமணம் செய்தால், இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்பதற்காகவும் மறுமணம் செய்து கொள்வதில்லை... இதுபோல் லட்சக்கணக்கான இளம்வயது பெண்கள், நாலு சுவர்களுக்குள்ளேயே தங்கள் வாழ்நாளை கழித்து, இறந்து போகும் அவலமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. எனினும் ஆங்காங்கே இந்த நிலைமை மாறி வருகிறது.. அதிலும் இளைய சமுதாயம், புது சிந்தனையுடன் வளர தொடங்கிவிட்டார்கள்.. தாயின் மகன் மற்றும் மகள்களிடையே இந்த மாறுதல்கள் ஏற்பட துவங்கிவிட்டது..

     வாட்டிய தனிமை

    வாட்டிய தனிமை

    சமீபத்தில் கூட, ஒரு மகள், தன்னுடைய தாய்க்காக வரன் தேடிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த வகையில், இப்போதும் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.. அந்த தாய்க்கு 59 வயதாகிறது.. திருச்சூரை சேர்ந்த அவரது பெயர் ரதிமேனன்.. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்... இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. 2 மகள்களுக்குமே திருமணமாகிவிட்டது.. அவரவர் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

    திவாகரன்

    திவாகரன்

    தன்னுடைய அம்மா, தனிமையில் தவித்து வருவதை கண்டு, ரதிமேனனின் மகள் பிரசிதா கலங்கினார்.. அம்மாவை நினைத்து வருந்தினார்... கண்டிப்பாக, தன் அம்மாவுக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்து, அதற்காக அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்றும் முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார்.. அப்போதுதான், அதே பகுதியை சேர்ந்த திவாகரன் என்பவர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வருவதை அறிந்தார்.. திவாகரனுக்கு 63 வயதாகிறது.

     தனிமை + துணை

    தனிமை + துணை

    தன் தாய்க்கு ஏற்ற துணை இவர்தான் என்று பிரசிதா முடிவு செய்தார்... திவாகரனுக்கும் 2 மகள்கள் இருக்கிறார்கள்.. திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர்.. அவரிடம் சென்று, தன்னுடைய அம்மாவின் தனிமை + துணை பற்றி எடுத்துக்கூறினார்.. அம்மாவுக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக எடுத்து சொன்னார்.. சூழலையும், நிலைமையும் புரிந்து கொண்ட திவாகரன், தன்னுடைய 2 பெண்களிடமும் இதை பற்றி பேசினார்.. தனிமையில் வாடும் தந்தையின் நிலைமையை அறிந்திருந்த அந்த பெண்களும், திருமணத்துக்கு சம்மதம் சொன்னார்கள்..

     தனிமை துயர்

    தனிமை துயர்

    இறுதியில், ரதிமேனனை திருமணம் செய்ய ஓகே சொன்னார் திவாகரன். இதற்கு பிறகுதான் ரதிமேனனின் சம்மதத்தையே மகள் பெற்றார்.. இறுதியில், திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தியும் காட்டினார்.. தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்... இதைப்பற்றி பிரசிதா பூரித்து சொன்னதாவது:

    சங்கிலிகள்

    சங்கிலிகள்

    "என்னுடைய அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள்... அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் எங்கள் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்... அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார்... எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என்று ஆகிவிட்டதால், அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்துக்காக மட்டுமே இந்த கல்யாணத்தை செய்துள்ளேன்" என்றார்.

     கலக்கம் + தயக்கம்

    கலக்கம் + தயக்கம்

    தனிமனித உணர்வுகளையும், உறவுகளுடனான மகத்துவத்தையும், இன்றைய இளைய சமுதாயம் புரிந்து வைத்திருப்பது வியப்பை தந்து வருகிறது.. இவர்களின் சிந்தனை விரிவடைந்து வருகிறது. இவர்களின் இதயம் விசாலமாகி வருகிறது.. இந்த விசால மனப்பான்மை பெருக, பெருக, தியாக பெண்களின், "கலக்க + தயக்க சங்கிலிகள்" நொறுங்கி கழண்டு விழ தொடங்கிவிட்டன..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+