EXCLUSIVE: 3 கிராமங்கள் மூழ்கிவிட்டது! நதியின் திசையே மாறிவிட்டது! வயநாட்டை உலுக்கிய பேய் கிராமங்கள்
திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 162 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நம்மிடம் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, முண்டக்காய் டவுன் முழுக்க முழுக்க களிமண்ணில் கட்டப்பட்ட கிராமம். இது சரிந்து அப்படியே சூரல் மாலா கிராமத்தில் விழுந்துள்ளது. இதனால் அந்த கிராமமும் சரிந்து உள்ளது. இதில் இருந்து சென்ற மண்.. அப்படியே தண்ணீரில் கலந்து அங்கே இருக்கும் ஏறுவலாஞ்சி ஆற்றின் போக்கையே மாற்றி உள்ளது. அதாவது அந்த ஆறு தடை பட்டு அருகே உள்ள ஊர்களை உடைத்துக்கொண்டு புதிய திசையில் தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. அங்கே நேரடியாக களப்பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் நம்மிடம் இது தொடர்பாக பேசி உள்ளனர்.
கேரளா மழை: தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.
அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
நிலச்சரிவு: இந்த மழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் அதே நாள் மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 162 பேர் பலியாகி உள்ளனர்..
கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. 400 குடும்பங்கள் கணக்கு வைத்து.. கிட்டத்தட்ட 1000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை அங்கே காணவில்லை.
முண்டக்காய் நகரில் நள்ளிரவு 1 மணியளவில் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முகாமாக செயல்படும் பள்ளி, அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர், சேறும் சகதியுமாக இருந்தது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்றுள்ளன. சுல்தான் பத்தேரி செயின்ட் மேரி கல்லூரியில் பரபரப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அங்கு சூரல்மாலா-முண்டக்காய் பேரிடரை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் அவசர மருத்துவ முகாம் வருகிறது. முண்டக்கையில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுல்தான் பத்தேரியில் உள்ள செயின்ட் மேரி கல்லூரியில் உள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்படுவார்கள்.
முகாமில் இருந்து, உடல்கள் பிணவறைக்கு மாற்றப்படும் பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் தன்னார்வத் தொண்டர்களாகப் பதிவு செய்து, பாரிய வெளியேற்றம் மற்றும் சுகாதாரப் பணிகளில் உதவுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் 2019ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 121 பேர் பலியாகினர். தற்போது மீண்டும் அங்கே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications