"ஹனுமன்".. கேரளா தம்பதி ஆம்புலன்ஸில் ஏற மறுத்தனரா.. காரணம் என்ன.. வைரலாகும் போலி செய்தி
ஆம்புலன்ஸில் அனுமான் ஸ்டிக்கர் ஒட்டி போலி செய்தியை பரப்பி உள்ளனர்
திருவனந்தபுரம்: ஹனுமான் புகைப்படம் ஒட்டியிருந்ததால், ஒரு கிறிஸ்தவ தம்பதி ஆம்புலன்ஸில் பயணிக்க மறுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு வைரலாகி வருகிறது.. ஆனால், இந்த குற்றச்சாட்டு போலியானது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதி அவர்கள்.. கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள்.. தொற்று பாதிப்பு குறித்த டெஸ்ட்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது..
ஆனால், தம்பதி அந்த ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன் என்று தகராறு செய்துள்ளனர். அந்த ஆம்புலன்சில் இந்து மத கடவுளான அனுமன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாலேயே, அவர்கள் ஆம்புலன்சில் ஏற மறுத்ததாகவும் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது..

தம்பதி
இது சம்பந்தமான பதிவுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகியது.. இந்த சம்பவத்தின் செய்தி குறிப்புடன், ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் அத்துடன் இணைந்தே வைரலாகியது.. அந்த ஸ்கீரின்ஷாட்டில், அனுமன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.. ஆம்புலன்ஸ் பக்கத்தில், கவச உடை அணிந்த சிலரும் நிற்கின்றனர்... ஆனால், இந்த பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த ஸ்கிரீன்ஷாட் எல்லாமே போலியானது என்று தெரியவந்துள்ளது.

தம்பதி
மேலும் அதில் இருந்த செய்தி நிறுவனம், தாங்கள் இப்படிப்பட்ட செய்தியை பதிவிடவே இல்லை என்று விளக்கம் தந்துள்ளது.. அதேபோல, வேறு எந்த செய்தி நிறுவனமும் இப்படிப்பட்ட பதிவுகளை வெளியிடவில்லையாம்..இறுதியில், இது ஒரு போலி செய்து என்பதும் உறுதியாகி உள்ளது.

போலி
கேரளா தம்பதிக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.. அந்த போட்டோக்கள் பெங்களூருவில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால், அதுவும் மார்பிங் செய்யப்பட்டுள்ளது.. கேரளாவில் போட்டோ எடுக்கப்பட்டதாக தவறான தகவல்களும் பரப்பப்பட்டிருந்த நிலையில், இந்த தகவலும் போலியானது என்று தெரியவந்துள்ளது.

இணையம்
கொரோனா தொற்று பலரையும் விட்டு வைக்காத நிலையில், இதுபோன்ற போலி செய்திகள் இணையத்தில் சிலர் தேவையின்றி பரப்பி வருவது வேதனையை தருகிறது.. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன, சில நேரத்தில் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டு வருவது கவலைக்குரியதாக மாறி வருகிறது.. மதத்தின் பெயரால் இந்த விஷயத்திலும் விஷமமா?!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications