Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிவப்பு" மண்ணை துளைக்கிறதா காவி.. "தேவனின்" வருகையால் பூக்கிறதா தாமரை? மீண்டும் ரெடியான கேரள பாஜக

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வரப்போகும் எம்பி தேர்தலில், கேரளாவில் குறிப்பிட்ட இடங்களையாவது வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கி வருகிறது. அந்த வகையில், கேரளா அரசியலே பரபரத்து காணப்படுகிறது.

தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக பல வருடங்களாகவே முயன்று கொண்டிருக்கிறது.. அந்தவகையில், கேரளாவில் விரித்த வலையில் பிரபலமான நடிகர்களே, பலர் விழுந்தனர்.

Famous actor Devan appointed as Kerala BJP vice president and what are the BJPs Next Plan

குறிப்பாக, கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதையடுத்து, கேரள பாஜகவில் ஏராளமான நடிகர்கள் இணைந்தனர். ஆனால், இணைந்த வேகத்தில் பலரும் பாஜகவை விட்டு வெளியேறிவிட்டனர்..

ராஜ்ய சபா : அந்தவகையில், பாஜகவில் நீடித்து வருபவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சுரேஷ் கோபியாவார். நாயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாயர் ஓட்டுக்கள் மொத்தமும் தங்கள் பக்கம் திரும்பும் என்று பாஜக கணக்கு போட்டது.. இதை மனதில் வைத்துதான், கடந்த 2016-ல், சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா சீட் தந்தது.. ஆனால், சுரேஷ்கோபியால், மெஜாரிட்டி வாக்குகளை பெற முடியவில்லை.

கடந்த எம்பி தேர்தலிலும், திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபிக்கு சீட் தந்தும்கூட, தோல்வியையே தழுவினார்.. ஒவ்வொரு முறையும் 3வது இடத்தை மட்டுமே சுரேஷ்கோபியால் தக்க வைக்க முடிந்தது.. எனவே, மாநில பாஜக தலைவராக தன்னை நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்தார் சுரேஷ் கோபி.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதனால், மேலிட பாஜகவுடன் லேசான அதிருப்தியில் சுரேஷ் கோபி இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

சர்ச்சைகள்: மற்றொருபுறம், சுரேஷ்கோபி மீதான சர்ச்சைகளும் அதிகமாகி கொண்டேயிருந்தது.. ஒருமுறை, கோயில் பூசாரியிடம், ரூ.1000 கொடுத்து, சர்ச்சையில் சிக்கினார் சுரேஷ் கோபி.. இன்னொருமுறை, விஷூ பண்டிகையின்போது, காருக்குள் உட்கார்ந்துகொண்டு, தன் காலை தொட்டு கும்பிடும் பெண்களை வாழ்த்தி, பணம் தந்து சர்ச்சையில் சிக்கினார்..

அவ்வளவு ஏன்? கடந்த மாதம்கூட, பெண் பத்திரிகையாளரின் தோளில் "கை" போட்டு, அநாகரீகமாக நடந்து கொண்டதாக பகீர் புகார் கிளம்பியது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

துணைத்தலைவர்: எனினும், எந்த தேர்தலிலுமே வெற்றி பெறாத சுரேஷ் கோபிக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது.. சுரேஷ் கோபி போலவே, பாஜகவை விட்டு விலகாமல், தொடர்ந்து அக்கட்சியில் ஐக்கியமாகி உள்ளவர் பிரபல நகடிர் தேவன் ஆவார்.. சுரேஷ் கோபி போலவே, தேவனும் எந்த தேர்தலிலுமே வெற்றி பெற்றதில்லை.. ஆனாலும், கட்சியில் மாநில துணைத்தலைவர் பதவி தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழில் "பாட்ஷா" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தேவன்.. கடந்த 2004-ம் ஆண்டு "கேரள மக்கள் இயக்கம்" என்ற கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு வந்த நிலையில், கடந்த 2021-ல் தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார்.

2 முறை சீட்: அதற்கு பிறகு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 2 முறை தேவனுக்கு சீட் தரப்பட்டது.. ஆனால் ஒன்றில்கூட தேவன், ஜெயிக்கவில்லை.. இப்போது, கட்சியின் மாநில துணைத்தலைவராக தேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வடமாநிலங்களை போலவே, தென் மாநிலங்களிலும், "கவர்ச்சி அரசியல்" வியூகங்களை பாஜக கையிலெடுத்து வருகிறது.. அத்துடன் "நாயர்" ஓட்டுக்களையும் தொடர்ந்து குறி வைத்து வருகிறது.. வடமாநிலங்களில் கை கொடுத்ததுபோல, தென்னகத்திலும் இந்த வியூகம் எடுபடுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

கவர்ச்சி அரசியல்: ஆனால், மக்களின் ஓட்டுக்களை பெறவேண்டுமானால், பிரபலங்களை களமிறக்கும் "கவர்ச்சி அரசியலையும்" தாண்டி, வேறு சில விஷயங்களும் இங்கு தேவையாக இருக்கிறது. அந்தவகையில், "சிவப்பு" மண்ணான கம்யூனிஸ கேரளாவில் "காவி"யின் நிறம் இனியாவது எடுபடுமா? புதுவியூகங்களுடன் பாஜக களமிறங்குமா? வலிமை பொருந்தி வரும் காங்கிரஸையாவது ஓவர்டேக் செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+