அந்த நடிகர் என்னை 1 மணி நேரம்.. கதறிய நடிகை! மல்லுவுட்டில் மலைபோல் பாலியல் புகார்..சிக்கலில் ’அம்மா’
திருவனந்தபுரம்: மலையாளத் திரை உலகில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாகவும் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாள திரை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தங்கள் மீதான பாலியல் புகார் காரணமாக சினிமா அகாடமி பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், நடிகர் சங்க பொறுப்பிலிருந்து சித்திக்கும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
வித்தியாசமான திரைக்கதை, எளிதான திரைப்பாணி உள்ளிட்டவை காரணமாக மலையாள திரை உலகம் கடந்த சில வருடங்களாக பொற்காலத்தில் பயணிக்கிறது என்று கூறலாம். காரணம் கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்கள் இந்தியா முழுவதும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன.

அதே நேரத்தில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு மலையாள திரையுலகில் ஆளாவதாகவும், சில நடிகர், இயக்குனர்கள் நடிகைகளை பாலியல் பொம்மைகள் போல பயன்படுத்துவதாக பகீர் புகார் எழுந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் நடிகை ஒருவர் ஓடும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில நடிகைகள் மலையாள திரையுலகில் பாலியல் தொல்லை புகார்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். இதை அடுத்து மலையாள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதில் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வல்சலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் இந்த கமிட்டி விசாரணை நடத்தியது. தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் புறக்கணிப்புகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். 2019ஆம் ஆண்டு இந்த குழு தனது அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது.
ஆனால் பல ஆண்டுகளாக அது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் இந்த அறிக்கை வெளியானது. அதில் பல நடிகைகள் பெண் கலைஞர்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகள், பெண் தொழில்நுட்ப பணியாளர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலையாள சினிமா அகடமி தலைவரும் பிரபல இயக்குனருமான ரஞ்சித், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார் . அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். "நான் 12 ஆம் வகுப்பை முடித்திருந்தபோது சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நடிகர் சித்திக், மகளே என தன்னை அழைத்ததாகவும், இதனால் அவரை நம்பி தான்" பேசியதாக கூறினார். மேலும் மலையாள சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பிரிவியூ தியேட்டருக்கு அழைத்துச் சென்று படம் பார்த்ததாகவும், பின்னர் தன்னை ஓட்டல் அறைக்கு கதை விவாதம் எனக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து புகார் அளித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார். அவர் சொன்னது போலவே தான் புகார் அளித்திருக்கும்போது எனக்கு யாரும் ஆதரவாக இல்லை" என அவர் வேதனையுடன் கூறியிருந்தார். மேலும் நடிகர் சுதீஷ் மீது ஜூபிதா என்ற துணை நடிகை புகார் அளித்தார். இதே போல திரிஷ்யம் படத்தில் நடித்திருந்த ஹன்சிபா ஹசன் தன்னிடம் பலர் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் அவர்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
இப்படியாக மலையாள திரையுலகில் அடுத்தடுத்து வரும் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து சினிமா அகடமி தலைவர் பதவி வகித்து வரும் இயக்குனர் ரஞ்சித் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இதேபோல நடிகர் சித்திக்கும் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தை மோகன்லாலுக்கு அனுப்பி இருக்கிறார். இதனால் மலையாள திரையுலகம் பெரும் பரபரப்பில் சிக்கி இருக்கிறது.
அதே நேரத்தில் புகாருக்கு ஆளானவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. விரைவில் அவர்கள் தங்கள் நிரபராதிகள் என நிரூபிப்பார்கள் என நடிகர்கள் இயக்குனர்களின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீதான புகார்கள் குறித்து மூன்றாம் நபர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications