இப்படி தோத்து போயிட்டாரே.. அதான், சபதம் போட்டபடி மொட்டை அடிச்சிக்கிட்டேன்.. ஷாக் கொடுத்த டைரக்டர்
திருவனந்தபுரம்: "இப்படி இவர் தோத்து போயிடுவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. இருந்தாலும் சபதம் போட்டபடி என் தலையை மொட்டை அடிச்சிக்கிட்டேன்" என்று சினிமா டைரக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜகவை எப்படியேனும் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சபரிமலை விவகாரத்தை கொண்டு ஆட்சியை பிடிக்க எண்ணியது.
இதன்காரணமாக தடையை மீறி, இந்தவிவகாரம் குறித்தே பிரச்சாரங்களில் பேசி சர்ச்சைக்கு உள்ளானார்கள். இவ்வளவு செய்தும் அவர்களால் இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போய்விட்டது.

பாஜக அதிர்ச்சி
குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் போன்ற முக்கிய இடங்களில் ஒன்றைகூட பாஜக கைப்பற்றவில்லை. போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களும், பிரபலமானவர்களும், அனுபவம் மிக்கவர்களும்தான்!

அலி அக்பர்
மாநில அளவிலான பாஜகவின் இந்த தேர்தல் தோல்வியை பிரபல இயக்குனர் அலி அக்பரால் ஜீரணிக்க முடியவில்லை. அலி அக்பர், கிட்டத்தட்ட 20 திரைப்படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு பாடல்கள், வசனங்கள் எழுதி இருக்கிறார். தீவிர பாஜக விசுவாசியும்கூட.

சவால்
பிரச்சாரத்தின்போது, "திருவனந்தபுரத்தில் கும்மனம் ராஜசேகரன் தோல்வியடைந்தால் நான் மொட்டை அடிச்சுப்பேன்" என்று சவால் விட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரிடம் அவரும் தோல்வியைத்தான் தழுவினார். இதனால் ஏற்கனவே சவால்விட்ட டைரக்டர் அலி அக்பர் மொட்டை அடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

நிறைவேற்றிட்டேன்
இதையடுத்து, அலி அக்பர் மொட்டை அடித்துள்ளார். இது சம்பந்தமாக போட்டோ ஒன்றையும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், "கும்மனன் ராஜசேகரன் தோற்றுவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவரது தோல்வி வருத்தம் தருகிறது. இருந்தாலும், நான் போட்ட சபதத்தை நிறைவேற்றி விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். அலி அக்பர் மொட்டையடித்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications