Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் முதல் "லுலு" மார்க்கெட்.. அதைவிடுங்க.. வெளியானது அடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு.. அசத்துதே

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பல்வேறு சிறப்பு அறிவிப்புகள், அதிரடிகள், தள்ளுபடிகள் போன்றவற்றின் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் "லுலு ஹைப்பர்" இப்போது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்து முடிந்து, லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.

First in Tamil Nadu Lu Lu Hypermarket in Coimbatore and LuLu Mall Palakkad, On Its Way to the Granary of Kerala

அறிவிப்புகள்: கோவையை பொறுத்தவரை, தொழில் நகரம் என்பதால், ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என ஷாப்பிங் இடங்கள் நிறைந்திருக்கின்றன.. ஆனாலும், எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..

லுலு மால் ஆரம்பித்த நாள் முதல் இப்போதுவரை அதன் விற்பனையில் எந்தமான சுணக்கமும் இல்லை.. போதாக்குறைக்கு பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தீபாவளிக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.. ஜெக்ஸ் என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அறிமுக விழாவில், 5000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, 500 ரூபாய்க்கான பரிசு கூப்பன்களை அறிவித்து பலரையும் கவர்ந்திழுத்தது.

கவர்ச்சி விளம்பரம்: இதில், புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு, ரூ.1999 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அரை கிராம் தங்க காசு பரிசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. லுலு மாலில் பெண்களை கவரும் வகையில் "பியூட்டி பெஸ்ட்" என்ற அழகு சாதனப்பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பொருட்கள் அனைத்தும் தரப்பட்டது.

லுலு ஹைபர் மார்க்கெட்களை பொறுத்தவரை, கொச்சி, பெங்களூரு, லக்னோ, கோவை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. திருச்சூரில் லுலு பேஷன் சென்டர், லுலு கன்வென்ஷன் சென்டர் போன்றவை உள்ளன..

கேரளா பாலக்காடு: அந்தவரிசையில், கேரளாவில் பாலக்காடு நகரில் முதல் சர்வதேச ஹைபர் மார்க்கெட் ஒன்றை திறக்க போகிறார்களாம்.. இதுகுறித்து, புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கமே ஒன்று உருவாக்கப்பட்டு, அதில், லுலு மார்க்கெட் குறித்த பதிவுகள் ஷேர் ஆகிவருகின்றன..

இன்ஸ்டாவில், சில வீடியோக்களும் பதிவாகி உள்ளன. அந்த வீடியோவில், பாலக்காட்டின் பசுமை போர்த்திய எழிலார்ந்த தோற்றங்கள், பாலக்காட்டின் சிறப்பு வாய்ந்த இடங்கள், கோயில்கள், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், போன்றவை அனைத்துமே கண்களுக்கு விருந்தாக ரவுண்டடிக்கிறது. அந்த வீடியோவின் கடைசியில், லுலு மால் வருகிறது. காத்திருங்கள் என்ற வாசகங்கள் உள்ளன.

விரைவில் வருகிறது: மேலும், பாலக்காட்டின் முதல் சர்வதேச ஹைபர் மார்க்கெட் - விரைவில் திறப்பு விழா என்றும், கடவுளின் தேசமான கேரளாவிற்கு வந்துகொண்டிருக்கிறோம் என்றும், மகிழ்ச்சியின் உலகம் லுலு மால் உங்கள் ஊரில் விரைவில் வருகிறது என்றெல்லாம் வாசகங்கள் இன்ஸ்டாவை ஈர்த்து வருகின்றன. இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட இணையவாசிகள், "பாலக்காட்டில் லுலுவா? என்று பெருத்த ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், கோவைக்கு அடுத்தபடியாக சென்னையிலும் லுலு மால் திறக்க ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு வணிகர் சங்கங்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை வலிய பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

சென்னை லுலு: 'சென்னையில் லுலு திறக்க அனுமதிக்க மாட்டோம், இது வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம்" என்று ஏற்கனவே கொந்தளித்திருந்தார் விக்கிரமராஜா. அதேபோல, லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டே விரட்டும் வகையில், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+