கேரளா: பினராயி விஜயனை எதிர்த்து பார்வார்டு பிளாக் தலைவரை வேட்பாளராக்க முயற்சித்த காங். திட்டம் டமார்
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்த் காங்கிரஸ் தலைமையானது கூட்டணி கட்சியான பார்வார்டு பிளாக் தேசிய செயலாளர் ஜி. தேவராஜனை நிறுத்த முயற்சித்தது. ஆனால் இதற்கு பார்வார்டு பிளாக் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் வலிமையாக இருக்கிறது பார்வார்டு பிளாக். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி கட்சி அது. ஆனால் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பார்வார்டு பிளாக் இடம் பெற்றுள்ளது.

பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் பார்வார்டு பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் போட்டியிட்டால் பினராயி வீழ்த்த முடியும் என கணக்குப் போட்டது காங்கிரஸ்.
ஆனால் பார்வார்டு பிளாக் கட்சியோ, மூத்த இடதுசாரி தலைவரை எதிர்த்து எங்களால் போட்டியிட முடியாது. சித்தாந்த ரீதியாக எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் தமது வேட்பாளரை அறிவித்தது.
தற்போது தர்மடம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications