வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. இப்பதானே ஓட ஆரம்பிச்சுது.. 3 நாளிலேயே இத்தனை கோடி ரூபாயா.. சபாஷ் கேரளா
திருவனந்தபுரம்: ரயில் பெட்டியில் மழைநீர் ஒழுகியது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல், பரோட்டாவில் புழுக்கள் போன்ற புகார்களை கடந்து, கேரள வந்தே பாரத் ரெயில் அபார வெற்றியை மக்களிடம் பெற்று வருகிறது. அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கும் காசர்கோடுக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயிலான இது தொடங்கி வைக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே கேரள மாநில மக்கள் அதில் அதிகளவில் சென்று வருகிறார்கள்.
ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது. இது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது.... திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 501 கி.மீ. தூரத்தை கடக்கும்.
இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தாண்டி செல்லும். 501 கி.மீ. தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 6 நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.. அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும்.
கடந்த 28-ம் தேதி முதல் இந்த ரெயில் வணிக ரீதியிலான சேவையை தொடங்கியது. அன்று முதல் கடந்த 3-ந் தேதி வரை அதாவது, முதல் 6 நாட்களில் மட்டும் இந்த ரெயில் மூலம் ரூ.2.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனை ரெயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான பயணத்தின் மூலம் ரூ.1.17 கோடியும், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான பயணம் மூலம் ரூ.1.10 கோடியும் கிடைத்துள்ளது. இந்த ரெயிலின் எக்ஸ்கியூட்டிவ் இருக்கையில், பயணம் செய்யவே பயணிகள் அதிகம் விரும்புகிறார்களாம்.. காரணம், இந்த ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சாதாரண இருக்கை வசதியில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் ரூ.1590. இதுவே எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய ரூ.2880 ஆகும்..
வந்தே பாரத் ரெயிலில் 1128 இருக்கைகள் உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கிய நாள் முதல் அனைத்து டிக்கெட்டுகளும் உடனுக்குடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும், வருகிற 14-ந் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரோட்டாவில் புழு: இந்த ரெயில் போக்குவரத்து துவங்கியதில் இருந்தே ஏகப்பட்ட புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. ரயில் பெட்டியில் மழைநீர் ஒழுகியது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல், பரோட்டாவில் புழுக்கள் போன்ற புகார்கள் வெளியாகி வண்ணம் உள்ளன.. இதில் பரோட்டாவில் புழு நெளிந்தது வீடியோவாகவும் வெளிவந்தது.. இது தொடர்பான விசாரணைகள் ஒருபக்கம் நடந்து பரபரப்பை கிளப்பி கொண்டிருந்தாலும், கேரள வந்தே பாரத் ரெயில் அபாரமான ஆதரவை மக்களிடம் தொடர்ந்து பெற்று வருவது, இந்த உடனுக்குடன் காலியாகும் முன்பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications