பிரபல நடிகையை கட்டிப்பிடித்து முத்தம்.. டாப் ஹீரோ சிக்கியாச்சு.. அடடே முகேஷ் கூடவா? பரபர மினி முனீர்
திருவனந்தபுரம்: ஹேமா கமிடி அறிக்கை வெளியாகி, கேரள திரையுலகையே கதிகலங்க செய்து வரும்நிலையில், நடிகைகள் ஒவ்வொருவராக பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது முன்வைத்து வருகிறார்கள்.. இப்போது நடிகை மினு முனீர் அளித்துள்ள குற்றச்சாட்டுதான், மலையாள சினிமாவை மேலும் கலங்கடித்து வருகிறது.
கேரள நடிகைகள், மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் நியமிக்கப்பட்டிருந்தது.

பாலியல் சீண்டல்: இந்தக் கமிஷனானது, கடந்த வாரம் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.. அதில், "15 பேர் பிடியில் மலையாள சினிமா சிக்கியிருப்பதாகவும், பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல் நடப்பதாகவும், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள சினிமாவில் உள்ளதாகவும், பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமா சாய்ஸ் வழங்கப்படுவதாகவும் பல்வேறு விஷயங்களை அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை கேரளா சினிமாவையே தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி வருகிறது.. பல பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருவது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது... அந்த வகையில் டைரக்டர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், அவர்கள் தாங்கள் சங்க பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளனர்.. இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
நடிகை மினு முனீர்: அந்தவகையில், நடிகை மினு முனீர் என்பவர், மொத்தமாக 4 பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை அள்ளி அள்ளி வீசியிருக்கிறார்.. மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேல பாபு ஆகியோர் மீது இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதில், மணியம்பிள்ளை ராஜூ என்பவர் குணச்சித்ர நடிகராக, கேரள மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.. தமிழில் வெளிவந்த பாசிலின் "பூவிழி வாசலிலே" படத்தில் சத்யராஜின் நண்பராகவும் நடித்திருப்பார்.. அதேபோல, நடிகர் இடவேல பாபு என்பவர், நடிகர் சங்கத்தில் துணைப்பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.
எம்எல்ஏ முகேஷ்: பிரபல நடிகர் முகேஷ் கொல்லம்தொகுதி எம்எல்ஏ ஆவார்.. பலேரி மாணிக்கம் பட விவாதத்தின் போது அந்த படத்தின் நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று நடிகை ஸ்ரீலேகா மித்ரா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை நேற்றைய தினம் கூறியிருந்தார்.. எனவே, ரஞ்சித் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முகேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், முகேஷ் மீதே தற்போது பரபரப்பு புகாரை கிளப்பியிருக்கிறார் நடிகை மினு முனீர் .. இது குறித்து அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், "கடந்த 2008ல் மலையாளத்தில் "தே இங்கோட்டு நோக்கியே" என்கிற படத்தில் நடித்தபோது அதன் கதாநாயகன் ஜெயசூர்யா, என்னை தனியாக ஒரு பிளாட்டிற்கு வருமாறு அழைத்தார்.. ஆனால், நான் மறுத்துவிட்டேன். அதேபோல நடிகர் முகேஷ் டபுள் மீனிங்கில் பேசி என்னிடம் எல்லை மீறி நடக்க முயன்றார்.

ஓட்டல் ரூம்: டா தடியா என்கிற படத்தில் நடித்தபோது, மணியம்பிள்ளை ராஜு, நான் தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு வர விரும்புவதாக சொன்னார்.. ஆனால், நான் அதற்கு மறுக்கவும், உடனே என்னிடம் ஷூட்டிங்கில் கோபத்தை வெளிப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல, நடிகை மினு முனீர், பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும், இந்த 4 பேரை பற்றியும் தெரிவித்துள்ளார்.. "நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.. மற்ற 2 நடிகர்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் என்னிடம் தவறாக நடந்துகொண்டனர்.
4 பேர் மீது புகார்: 2013ல், ஒரு படத்தில் நடித்து வந்தபோது நடிகர் முகேஷ் , மணியன்பிள்ள ராஜூ , இடவேல பாபு , ஜெயசூர்யா என்று இந்த 4 பேருமே எனக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தனர்.. "டி இங்கொட்டு நோக்கியே" என்ற ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது..
அப்போது ஒருநாள் நான் பாத்ரூமுக்கு சென்று வந்தபோது, ஜெயசூர்யா என்னை பின்னாடியிருந்து வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டார்.. இதனால் நான் அதிர்ச்சியடைந்து, பயந்துபோய் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டேன். தன்னுடைய ஆசைக்கு ஒத்துழைத்தால் பலன் கிடைக்கும் என்று ஓபனாகவே சொன்னார்.. நான் இதற்கு மறுப்பு சொன்னதால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

செல்வாக்கு: அதே போல, நடிகர் முகேஷூடன் "காலண்டர்" படத்தின் ஷூட்டிங்கின்போது , என்னிடம் தவறாக நடந்து கொண்டார்... தவறாகவும் பேசினார். நான் அதற்கு ஒத்துப்போகாததால், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் விண்ணப்பத்தை முகேஷ் நிராகரித்துவிட்டார்.. நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேல பாபு என்னிடம் வெளிப்படையாக பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்து, துன்புறுத்தினார்கள்..
என்னைப்போல் நிறைய பெண்கள் இந்த மாதிரி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.. இந்த 4 நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நான் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்.. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தாக்குபிடிக்க முடியாமல் சென்னைக்கு ஓடிவந்தேன்..
விசாரணை குழு: நான் ஏன் சென்னைக்கு வந்தேன்? ஏன் நடிப்பை கைவிட்டேன்? என்று யாருமே என்னிடம் விசாரிக்கவில்லை.. நான் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு இப்போது நீதி கேட்கப்போகிறேன். அவர்கள் மீது அரசு விசாரணைக் குழுவிடம் புகார் அளிக்க போகிறேன்" என்று ஆவேசத்துடன் கூறியிருக்கிறார் நடிகை மினு.
ஏற்கனவே, நடிகை ரேவதி சம்பத், நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். நடிகர் ரியாஸ் கான் மீது இன்னொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம் படத்தில் நடித்த ஹன்சிபா ஹசன், சோனியா மல்ஹர் உட்பட பலர் மலையாள திரைத்துறையினர் மீது வரிசையாக பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், நடிகை மினு தந்துள்ள இந்த குற்றச்சாட்டானது, மலையாள சினிமாவில் மேலும் புயலை கிளப்பி விட்டு வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications