அதே கோழிக்கோட்டில் மீண்டும் நிபா வைரஸ்.. பதற்றத்தில் பினராயி.. குழப்பத்தில் வீணா.. சைலஜா எங்கே?
திருவனந்தபுரம்: கேரளாவை மீண்டும் நிபா வைரஸ் உலுக்கி உள்ளது. 2018ல் கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அங்கு நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக சிறுவன் ஒருவர் பலியாகி உள்ளார். கோழிக்கோடு அருகே நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நிபா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளார்.
நேற்று இரவு நிபா வைரஸ் அறிகுறியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ரிசல்ட் வருவதற்குள் அவர் உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். மிகவும் மோசமான உடல்நிலையுடன்தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018
கடந்த 2018ல் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதே நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. அப்போது கோழிக்கோடு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது அப்போது இந்த நிபா
பரவல் காரணமாக கேரளாவில் 17 பேர் பலியானார்கள். அதன்பின் மீண்டும் கேரளாவில் 2019ல் நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அப்போது பெரிய அளவில் இதனால் யாருக்கும் பாதிப்பு அடையவில்லை. ஆனால் தற்போது மீண்டும் அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

முதல்வர்
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டு இருப்பது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இது சிக்கலாக முடிந்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை சரியாக கட்டுப்படுத்தவில்லை என்று விஜயனுக்கு எதிராக கேரளாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் வைத்து வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று விஜயனுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன.

சிக்கல்
மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பினராயி விஜயனுக்கு எதிராக இது திரும்பி உள்ளது. தேசிய அளவில் பதிவாகும் கொரோனா கேஸ்களில் 70 சதவீத கேஸ்கள் கேரளாவில் இருந்துதான் பதிவாகி வருகிறது. கேரளாவில் தற்போது பாசிட்டிவ் டிபிஆர் சதவிகிதம் 19.3% ஆக உள்ளது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் கிட்டத்தட்ட 20 பேருக்கு அங்கு கொரோனா ஏற்படுகிறது. அந்த அளவிற்கு கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எப்படி?
நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது ஆகும். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும். பன்றிகள், வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவும். அப்படி இருக்கும் போது எப்படி மீண்டும் இந்த வைரஸ் தோன்றியது. எப்படி மீண்டும் மக்கள் இடையே இந்த வைரஸ் பரவ தொடங்கியது என்ற கேள்வியை இது ஏற்படுத்தி உள்ளது. சரியாக எப்படி கேரளாவில்.. அதிலும் எப்படி சரியாக அதே கோழிக்கோட்டில் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டது என்ற கேள்வியை இது ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்
அதோடு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் தொடக்க காலத்தில் கேரளா பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அங்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டாம் முறை சைலஜாவிற்கு பதிலாக வீணா ஜார்ஜுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் இளம் பெண் என்பதால் சுகாதாரத்துறையை இவர் எப்படி கவனிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சைலஜா
ஆனால் இவர் கொரோனா தடுப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் உள்ளது. சைலாஜா அளவிற்கு இவரின் பணிகள் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் போது தற்போது நிபா வைரஸ் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இதையும் எப்படி எதிர்கொள்வார் என்று கேள்வி எழுந்துள்ளது. நிபா வைரஸ் தாக்குதலை எதிர்கொண்ட அனுபவம் கொண்டவர் சைலஜா.

மக்கள் கோரிக்கை
நிபா என்ற வைரஸை அடக்கி இந்தியாவிற்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் உதாரணமாக திகழ்ந்தவர் சைலஜா. இதனால் தற்போது சைலஜா எங்கே என்று அம்மாநில மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவரை மீண்டும் நிபா மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை மீண்டும் இறக்க வேண்டும். அவரின் அறிவுரைகளை பெற்று கேரளாவில் மீண்டும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து தற்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு விஜிலென்ஸ் படைகள் அனுப்பப்பட்டுள்ளது.

படை
அங்கு நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியான சிறுவனின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு இன்னொரு பக்கம் அண்டை வீடுகள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் காண்டாக்ட் டிரேசிங் முறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிறுவன் தொடர்பு கொண்ட நபர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகில் எங்கும் இதற்கு சிகிச்சை முறை என்ன என்றும் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேபோல் வேக்சினும் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்கள் இடையே கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications