100-வது பிறந்த நாளில் 'இடதுசாரி' அச்சுதானந்தன்-102 வயது 'காம்ரேட்' சங்கரய்யா கணீர் குரலில் வாழ்த்து!
திருவன்ந்தபுரம்: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரும் கேரளா முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் இன்று 100-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்தியாவின் மற்றொரு முதுபெரும் இடதுசாரித் தலைவரான 102 வயதை எட்டிய சங்கரய்யா உள்ளிட்டோர் அச்சுதானந்தனுக்கு 100-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இன்று 100-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நாடு முழுவதும் இடதுசாரிகள் அச்சுதானந்தனின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ. வாழ்த்து: அச்சுதானந்தனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து: அக்டோபர் 20 முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன் -100 வயது இன்று... இன்னல் நிறைந்த இளமைப் பருவம்... 4 வயதில் அம்மாவையும், 11 வயதில் அப்பாவையும் 7 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பையும் இழந்தவர்.
12 வயதில் டெய்லர் கடையில் வேலை.
85 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை...
15 வயதில் காங்கிரஸ் உறுப்பினர்
17 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில்...
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஐந்தாண்டு சிறை வாசம்...
1964 இல் சி.பி.எம் உருவாக்க அடித்தளம் இட்ட 32 பேரில் ஒருவராக...
மக்கள் தலைவராக.... 7 முறை சட்டப் பேரவை உறுப்பினர்
சி.பி.எம் மாநிலச் செயலாளர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
இரண்டு முறை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்
2006 - 11 கேரள முதல்வர்
2016 - 21 நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் ஆக...
புன்னப்புரா வயலார் துவங்கி உழைக்கும் மக்களின் பல்வேறு போராட்டங்களை பங்கேற்றும் வழி காட்டியும் நடத்தியவர். நீண்ட நெடிய அப்பழுக்கற்ற பொது வாழ்க்கை... நூறு வயதை நிறைவு செய்யும் மகத்தான தலைவர் தோழர் வி.எஸ்! போற்றுவோம்!வாழ்த்துவோம். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு தெரிவித்துள்ளது.

சங்கரய்யா வாழ்த்து: 102 வயதை கடந்த முதுபெரும் இடதுசாரித் தலைவரான சங்கரய்யாவும் அச்சுதானந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சங்கரய்யா, கேரளாவின் பிடல் காஸ்ட்ரோ என்ற தலைப்பில் முதுமையிலும் கணீர் குரலில் வீடியோ பதிவை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

அக்டோபர் 20 முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன் -100 வயது இன்று... இன்னல் நிறைந்த இளமைப் பருவம்...நூறு வயதை நிறைவு செய்யும் மகத்தான தலைவர் தோழர் வி.எஸ்! போற்றுவோம்!வாழ்த்துவோம்! செவ்வணக்கம்! #Comrade #VSAchuthanandan #Kerala #CommunistLeader pic.twitter.com/K7PxeaSb3M
— CPIM Tamilnadu (@tncpim) October 20, 2023
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications