இனி சீனா, துபாய்க்கு போக வேண்டாம்! கேரளாவில் 3500 அடி உயரத்தில் நீளமான கண்ணாடி பாலம்! செம த்ரில்!
திருவனந்தபுரம்: கேரளாவின் மிக நீளமான பாலம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டம் பிக்சர்ஸ்க் மலை பிரதேசத்தில் நீளமான கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் ஆகும். கோலாஹலமேடு பகுதியில் உள்ள இந்த கண்ணாடி பாலம் வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

மிக தூரத்தில் உள்ள முண்டக்காகயம், குட்டிக்கல் மற்றும் கோக்காயார் ஆகிய தொலை தூர பகுதிகளை கூட இந்த கண்ணாடி பாலத்திலிருந்து ரசிக்கலாம். இந்த பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
முதல் நாள் என்றாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இந்த பாலத்தை சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார். இவருடன் எம்எல்ஏக்கள் வாழூர் சோமன், எம்.எம். மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னவென தெரியுமா?
இது 40 மீட்டர் நீளமுடையது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ 3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 பார்வையாளர்கள் இந்த பாலத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்,
வயது வித்தியாசமின்றி குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு ரூ 500 கட்டணமாக வசூலிக்கப்டுகிறது. இந்த பாலத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிடலாம். இந்த பாலத்தில் பெரியவர்களும் சிறியவர்களும் திரில்லிங்கான அனுபவத்தை பெறலாம். இதற்கு சாகச பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு பெயர் கண்டீலீவர் கண்ணாடி பாலம். 120 அடி நீளம் கொண்டது இந்த பாலம்.
கண்ணாடி பாலம் கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது. இதனால் இங்கு கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. பாலத்தின் மேல் 15 அல்லது 20 பேரைத்தான் அனுமதிக்கிறார்கள். மற்ற விளையாட்டு நிகழ்வுகளான ஸ்கை விங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கை ரோலர், ராக்கர் எஜெக்டர், ஃப்ரீ பால், ஜியாண்ட் ஸ்விங் மற்றும் ஜிப் லைன் ஆகிய விளையாட்டுகளும் உள்ளன.
கண்ணாடி மேல் நடப்பதும் கண்ணாடியின் முனைக்கு சென்று 3500 அடி ஆழ பள்ளத்தை பார்ப்பதும் திகிலூட்டும் சம்பவம் இருக்கிறது. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் இங்கு வந்தால் நிச்சயம் மறக்க முடியாத திகில் அனுபவத்தை பெறலாம். 35 டன் ஸ்டீல், ஜெர்மனி கண்ணாடி கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சாகச பாலங்களை பார்வையிட இனி துபாய் அல்லது சீனாவுக்கு போக தேவையில்லை. கேரளாவின் இடுக்கிக்கு போங்க!
-
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர்












Click it and Unblock the Notifications