எல்லாமே தங்கம்.. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்.. இப்போது சிறைப்பறவை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள தனது மைத்துனி வீட்டில் 17 சவரன் தங்க நகைகளை திருடியதாக இன்ஸ்ட்கிராம் பிரபலம் முபீனா (26) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு நகை திருடிய கேரளாவைச் சேர்ந்த அந்த பெண், எப்படி போலீசில் சிக்கினார் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்கள், பெண்களில் சிலர் இன்ஸ்டாகிராம், யூடியூப் , பேஸ்புக் தான் உலகம் என்று நினைத்து தாங்கள் வாழ்க்கையை அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முகம் தெரியாதவர்கள் மூலம் கிடைக்கும் லைக்ஸ், கருத்துக்களில் ஆர்வம் செலுத்தும் அவர்கள், அதுதான் வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்..

சிலர் வீடியோக்கள், கருத்துக்ளை போட்டு அதில் பேமஸ் ஆவதுடன், அதில் இன்புளுயன்சர்கள் ஆகிவிடுகிறார்கள். அதில் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லா இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்களும் சம்பாதிப்பது இல்லை.. சில இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்கள் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தவறான செயல்களையும் செய்கிறார்கள். அப்படித்தான் கேரள இன்ஸ்டாகிராம் பிரபலம் செய்து தற்போது கம்பி எண்ணி வருகிறார்.
கேரளாவில் பஜனமடத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் முபீனா தனது மைத்துனி மற்றும் நண்பர்களின் வீடுகளில் 17 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கேரளாவில் கொல்லம் மாவட்டம் பஜனமடத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் முபீனா (26 வயது).
கடந்த செப்டம்பர் மாதம் கொல்லம் கிழிநிலையில் உள்ள முபீனாவின் மைத்துனி முனீராவின் வீட்டில் இருந்து ஆறு சவரன் தாலிச் சங்கிலி, தலா ஒரு பவுன் இரண்டு செயின்கள் மற்றும் தலா இரண்டு கிராம் எடையுள்ள காதணிகள் காணாமல் போயிருக்கிறது. ஆனால் தங்க நகை திருட்டு போனது கடந்த அக்டோபர் 10ம் தேதி தான் முனீராவுக்கு தெரிய வந்தது. முனீரா வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, செப்டம்பர் 30ம் தேதி காலை முபீனா வீட்டில் இருந்து திரும்பி வருவதைக் கண்டிருக்கிறார்.அக்டோபர் 10ம் தேதி வரை வீட்டுக்கு யாரும் வராதது தெரிந்தது.
இதையடுத்து முனீரா அக்டோபர் 12ம் தேதி, தனது மைத்துனி முபீனா மீது கொல்ல மாவட்டம் சித்தரை போலீசில் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளை போலீசிடம் காண்பித்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம், முபீனாவின் தோழியும் இதேபோன்ற திருட்டு புகாரை முபீனா மீது கொடுத்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் முபீனாவின் மைத்துனியும் சிசிடிவி காட்சியுடன் தற்போது புகார் அளித்தததால் சிக்கி உள்ளார். முபீனாவின் கணவர் சமீபத்தில் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார், முபீனா கையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள போன் இருந்துள்ளது.
இதையடுத்து சந்தேகத்தை உறுதி செய்த போலீசார், இன்ஸ்டாகிராம் பிரபலமான முனீபாவை காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் முதலில் அவர் திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை.. பின்னர் தங்கள் பாணியில் போலீசார் விசாரித்த பின்னர். முபீனா இரண்டு திருட்டையும் ஒப்புக்கொண்டார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு உறவினர்கள் வீடுகளில் தங்க நகைகளை திருடியாக தெரிவித்தார். முபீனாவின் வீட்டில் திருடப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை கணிசமாக போலீசார் மீட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முபீனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications