மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம்
திருவனந்தபுரம்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை போல் கேரளாவில் உள்ள ஜிம்மில் புதிய ரூல்ஸ் உருவாக்கப்பட்டது. ஜிம்மில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. பெண்களும், ஆண்களும் இஸ்லாமிய வழிக்காட்டுதல்படி தான் உடை அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் ஜிம்முக்கு செல்லக்கூடாது. லைசென்ஸ் வைத்திருக்க கூடாது. மேற்படிப்பு கூடாது.
ஹோட்டல்களில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுவதுமாக மறைக்கும் வகையிலான புர்காவை பெண்கள் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பினாலும் தாலிபான்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை போல் கேரளாவில் உள்ள ஜிம்மிலும் புதிய ரூல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புதுநகரம் பகுதியில் 15 ஆண்டுகளாக ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம் தான் 'இஸ்லாம்-நட்பு ஜிம்' ஆக மாறும் வகையில் ரூல்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
ஷரியா சட்ட அடிப்படையிலான வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் இந்த ஜிம்மில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக 'நவாஸ் முத்து டி'யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ''ஜிம்மிற்குள் மியூசிக்கிற்கிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுகிறது.
ஆண்களும், பெண்களும் ஒன்றாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. இருவருக்கும் தனிதனியாக நேரங்கள் வழங்கப்படும். உடற்பயிற்சி செய்யும் போது இஸ்லாமிய வழிகாட்டுதல்களின்படி 'அவ்ரா' (மறைக்கப்பட வேண்டிய உடல் பாகங்கள்) முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் அதற்கேற்ற உடைகளை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் ஹிஜாப் உள்ளிட்ட ஆடைகளை அணிய வேண்டும்.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போடப்படுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த அறிவிப்பு டெலிட் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது இந்த ஜிம் குறித்த தகவல்களை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications