விடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்!
Recommended Video
திருவனந்தபுரம்: விடிய விடிய சாத்தான் பூஜை நடத்தி இருக்கிறார் ஜோலி.. நரபலி என்பது இந்த சாத்தான் பூஜையின் ஸ்பெஷல் திங்... துர்மந்திரவாத பூஜை, சாத்தான் பூஜை, நரபலி என்று ஜோலி சொல்ல சொல்ல.. கேரள போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
2002 முதல் 2016 வரை கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேரை அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் அந்த வீட்டு மருமகள் ஜோலியை கைது செய்துள்ளனர்.
இவருடன் உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு வார காலம் போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். அப்போது தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இப்போது திரும்பவும் அவர்களை விசாரிக்க 3 நாள் அனுமதி வேண்டும் என்று கேட்க, கோர்ட்டும் அதற்கு அனுமதி தந்துள்ளது. அதன்படி 2-ம் கட்ட விசாரணை நடந்து வருகிறது.

தகவல்கள்
அதில் ஜோலி சொன்ன தகவல்களை கேட்டு கேரள போலீசாருக்கு தலையே சுற்றி விட்டது. சயனைடை கோவை வந்து வாங்கி போயுள்ளார் ஜோலி. ஏற்கனவே கோவையில்தான் ஜோலிக்கு ஒரு பாய் ஃபிரண்ட் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரிடமும் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், கோயம்புத்தூர் வந்து விஷத்தை வாங்கி சென்றுள்ளது புதிய தகவலாக வெளிவந்துள்ளது.

ஸ்கூட்டரில் வேலை
கோழிக்கோடு என்ஐடியில் வேலை செய்வது போலவே பாசங்கு செய்துள்ளார். இப்படியே 14 வருஷம் பாவ்லா காட்டி உள்ளார். காலையில் கார் அல்லது ஸ்கூட்டரில் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு, சாயங்காலம்தான் வீடு திரும்புவார்.

சாத்தான் பூஜை
இதைதவிர, ஜோலி சாத்தான் பூஜை நடத்தி வந்துள்ளார். அதாவது துர்மந்திரவாத பூஜை அது. கோழிக்கோடு மற்றும் கட்டப்பனையில் இந்த சாத்தான் பூஜை நடந்துள்ளது. இதில் ஜோலி தவறாமல் கலந்து கொண்டு இருக்கிறார். கட்டப்பனையில் கிருஷ்ணகுமார் என்ற ஜோசியக்காரர் இருக்கிறாராம். இவர்தான் சாத்தான் பூஜைகள் செய்வாராம். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியாதாம்.. மெம்பர் ஆக இருப்பவர்கள்தான் கலந்து கொள்ள முடியும்.

நரபலி
இந்த பூஜையின் நோக்கம் பணம், கூரையை பிய்த்து கொண்டு கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்பதுதான். இது எல்லாவற்றையும்விட ஷாக், இந்த பூஜையின் ஹைலைட் நரபலியாம். இப்படி நரபலி தந்தால், பூஜை முழுமையாக நிறைவேறும் என்பது நம்பிக்கை போலும்.

பிரட்டில் விஷம்
அதிலும் சாத்தான் பூஜையில் பெண் குழந்தைகளை கொல்வது ஒரு சென்டிமென்ட்.. அது கட்டாயமும்கூட.. ஒருவேளை, 6 பேரை ஜோலி கொன்றதுகூட இதற்காகத்தானோ, தன் 2-வது கணவரின் குழந்தை ஆல்பைனை சாப்பிடும் பிரட்டில் விஷத்தை தடவி கொடுத்து ஊட்டி கொன்றதும் இதற்காகத்தானோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

போலீஸ் ஷாக்
ஜோலி அந்த குழந்தையை மட்டும் அல்லாமல் வேறு சில குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தாராம். சாத்தான் பூஜை, நரபலி என்ற விஷயமே இப்போதைக்கு கேரளாவில் கிலியை தந்து வரும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் இனி வரும் விசாரணையில் வெளிவர போகிறதோ தெரியவில்லை.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications