படுக்கையில் கிடந்த கத்திரிக்குட்டி.. பக்கத்தில் யாரு? விக்கித்து நின்ற மகன், மகள்.. கேரளாவில் கொடுமை
திருவனந்தபுரம்: படுபயங்கரமான சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்து, ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சியில் நிலைகுலைய வைத்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கேரளா மாநிலம், மூவாற்று புழாவில் குளங்காட்டுப்பாறையைச் சேர்ந்த முதிர்ந்த பெண்மணி கத்திரிக்குட்டி.. 85 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் ஜோசப்.. 88 வயதாகிறது.. இவர்களுக்கு பிஜு என்ற மகனும், ஜோலி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

கத்திரிக்குட்டி: கத்திரிக்குட்டிக்கு உடல்நிலை சரியில்லை.. இதனால் பல வருடமாகவே, படுத்த படுக்கையாக உள்ளார்.. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும்கூட, எந்தவித பலனும் கத்திரிக்குட்டியின் உடல்நலனில் ஏற்படவில்லை.. இதனால், வீட்டிலேயே படுக்கையில் உள்ளார்..
இந்த நிலையில் நேற்றிரவு, மகன், மகள், உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. அப்போது திடீரென வீட்டிற்குள் கத்திரிக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டது... இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பிள்ளைகள் பதறியடித்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது, கத்திரிக்குட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.. அவரது கழுத்து அறுபட்டு கிடந்தது.. படுக்கைக்கு பக்கத்திலேயே அவரது கணவர் ஜோசப், கத்தியுடன் நின்றுகொண்டிருந்தார்.
மூவாற்று புழா: இந்த கோலத்தை பார்த்து ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அலறி துடித்தனர்.. அதற்குள் மூவாற்று புழா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்தனர்.. இவர்களது மகன் பிஜுதான் போலீசுக்கு தகவல் சொன்னார் ஆனால், போலீஸ் வருவதற்குள் ஜோசப் அங்கிருந்து மாயமாய் ஓடிமறைந்தார்..
பின்னர் வீட்டிற்கு வந்த போலீஸார், கத்திரிக்குட்டியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் தலைமறைவான ஜோசப்பையும் வலைவீசி தேடியது.. விடிய விடிய தேடிய நிலையில், அதிகாலயில் ஜோசப் சிக்கினார்.. அவரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார், தீவிரமான விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
விரக்தியா: 85 வயது பாட்டியை, 88 வயது தாத்தா ஏதற்காக கொன்றார்? என்று காரணம் உடனடியாக ளதெரியவில்லை.. மனைவி படுத்த படுக்கையாக கிடந்த விரக்தியில் கொன்றுவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.. கழுத்தை அறுத்துகொன்ற இந்த கொடூரமாக கொலை சம்பவம், கேரளாவில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications