பஸ்ஸில் "கையை" வைத்து சில்மிஷம்! லைவில் வீடியோ போட்ட பெண்.. புரட்டி எடுத்த நடத்துனர்! கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்தில் நடிகை ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தொல்லை கொடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் முழுக்க இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் பேருந்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பேருந்தில் நந்திதா என்ற நடிகை பயணம் செய்துள்ளார்.
அவருக்கு அருகில் சாவத் என்ற இளைஞர் வந்து அமர்ந்துள்ளார். முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசி உள்ளார். நீங்கள் எங்கே செல்கிறீர்கள். நீங்கள் செல்லும் பகுதியில் டிராபிக் இருக்குமா.

நானும் அங்குதான் செல்கிறேன். சாப்பிட நல்ல கடை என்ன இருக்கிறது என்றெல்லாம் கேட்டுள்ளார்.
ஆனால் சில நிமிடங்கள் நந்திதாவை சாவத் தவறாக சீண்ட தொடங்கி உள்ளார். முதலில் காலில் லேசாக கை வைத்தவர் அதன்பின் இடுப்பிலும் கை வைத்துள்ளார். தவறுதலாக நடந்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு திரும்பி பார்த்த நந்திதாவிற்கு ஷாக்.
அங்கே சாவத், தனது பேண்டிற்கு கைவிட்டு.. ஆணுறுப்பை தொட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஷாக் ஆன நந்திதா.. உடனே ஜன்னல் ஓரம் அமர்ந்து.. அப்படியே போனை எடுத்து பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டுள்ளார்.
அப்போது இதை கவனிக்காத சவாத் சில நிமிடங்களில் ஆணுறுப்பை வெளியே எடுத்து உள்ளார். இதை பார்த்ததும் ஷாக் ஆன நந்திதா உனக்கு என்ன பிரச்சனை என்று.. கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாவத் அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். உடனே நந்திதா கத்தியதும்.. நடத்துனர் வந்து.. உனக்கு கம்பளைண்ட் உண்டோ என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
அந்த பெண் நடந்ததை விளக்கி உள்ளார். முதலில் சாவத் இதை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார். அதன்பின் சைடு கேப்பில் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓட முயன்றுள்ளார். அனால் நடத்துனர் பிபி பிரதீப் அவரை விடாமல் துரத்தி சென்று போய் பிடித்து அடித்து வெளுத்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதில் நந்திதா.. சாவத்திடம்.. நீ ஏன் அப்படி செய்து கொண்டு இருக்கிறாய் என்று சொல்ல.. அந்த இளைஞர் நான் என்ன செய்தேன் என்று மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார்.
உடனே நடத்துனர் வந்து கேள்வி கேட்டதும்... நந்திதா.. அவன் ஜிப் திறந்து இருக்கு பாருங்க என்று கூறி உள்ளார் . நடத்துனரும் இதை கவனித்து உள்ளார். வீடியோவில் இது மொத்தமாக பதிவாகி உள்ளது.

உடனே விஷயத்தை புரிந்து கொண்ட நடத்துனர் பேருந்தை நிறுத்தும்படி கூறி உள்ளார். பேருந்தை நிறுத்தியதும் நடத்துனரை தள்ளிவிட்டு சாவத் ஓடி உள்ளார். ஆனால் கடைசியில் நடத்துனர் அவரை பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தார்.
இதில் அந்த பெண்ணின் செயலும், நடத்துனரின் செயலும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. சாவத் என்ற அந்த இளைஞரின் செயலை பற்றி அந்த பெண் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட வேறு சில பெண்கள்.. அதே ஆண் தங்களிடமும் இதேபோல் நடந்து கொண்டதாக கூறி உள்ளனர். அவரை கைது செய்த போலீசார் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications