திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் கொரோனா பரவல் அதிதீவிரம் - முழு ஊரடங்கை அறிவித்த முதல்வர் பினராயி விஜயன்

கேரளா மாநிலத்தில் மே 8ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை முதல் அங்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 16ஆம் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் குறைக்கவே லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. 4 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலின் சங்கிலி தொடரை உடைக்க முழு ஊரடங்கு என்ற தற்காலிக தீர்வை மாநில அரசுகள் கையிலெடுத்துள்ளன.

மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வரிசையில் தற்போது கேரளாவும் முழு ஊரடங்கை பிறப்பித்திருக்கிறது. மே 8ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை இந்த முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சம்.. இந்திய பயணிகள் வருவதற்கு இலங்கை அதிரடி தடை.. விமான சேவை நிறுத்தம்!கொரோனா அச்சம்.. இந்திய பயணிகள் வருவதற்கு இலங்கை அதிரடி தடை.. விமான சேவை நிறுத்தம்!

மூன்றாம் அலை

மூன்றாம் அலை

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் வீரியமாக இருக்கிறது. இரண்டாம் அலையின் கோர தாண்டவத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசின் அரசியல் ஆலோசகர் எச்சரித்திருக்கிறார்.

42 ஆயிரம் பேர் பாதிப்பு

42 ஆயிரம் பேர் பாதிப்பு

கேராளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 953 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை முதல் அங்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு லாக்டவுன்

முழு லாக்டவுன்

மே 16ஆம் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் குறைக்கவே லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தேவை

தடுப்பூசி தேவை

இதனிடையே கேரளாவிற்கு குறைந்தது 1,000 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் வெண்டிலேட்டர்களை கேரளாவிற்கு வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 75 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கேரளாவிற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசியை வீணாக்காத கேரளா

தடுப்பூசியை வீணாக்காத கேரளா

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கேரளாவில் சிறிய அளவில் கூட தடுப்பூசி வீணாவது இல்லை என மத்திய அரசு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Kerala government on Thursday announced a full lockdown in the state from May 8 to 16 in view of the rising cases in the second wave of Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X