கேரளா இடைத்தேர்தல்: இடதுசாரிகள், காங்கிரஸை ‘மெர்சலாக்கிய’ பாஜகவின் ‘அடேங்கப்பா’ வாக்குகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Kerala Assembly Byelection Results 2019 : கேரள இடைத்தேர்தலில் முன்னிலை பெரும் காங்கிரஸ்

    திருவனந்தபுரம்: கேரளாவின் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் 2, காங்கிரஸ் 2 மற்றும் காங்கிரஸின் கூட்டணி கட்சியான இந்திய தேசிய முஸ்லிம் லீக் 1 தொகுதியில் வென்றுள்ளன. அதேநேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பாஜக பெற்றிருக்கும் வாக்குகளானது இடதுசாரிகள், காங்கிரஸுக்கு சவால்விடுக்கும் வகையில் இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    கேரளாவின் அரூர், மஞ்சேஷ்வர், கொன்னி, எர்ணாகுளம், வட்டியூர்காவு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வசம் இருந்த வட்டியூர்காவு மற்றும் கொன்னி சட்டசபை தொகுதிகளை அதிரடியாக ஆளும் இடது முன்னணி கைப்பற்றி உள்ளது.

    திருவனந்தபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட வட்டியூர்காவு சட்டசபை தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் கே. முரளீதரன் 51, 322 வாக்குகள் பெற்றிருந்தார். அவருக்கு அடுத்ததாக பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் 43,700 வாக்குகளையும் சிபிஎம் கட்சியின் சீமா 40,441 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

    காங். கோட்டை கபளீகரம்

    காங். கோட்டை கபளீகரம்

    இம்முறை ஒட்டுமொத்தமாக நிலவரம் தலைகீழானது. சிபிஎம் வேட்பாளர் பிரசாந்த் 54,830 வாக்குகள் பெற்று அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறார். காங்கிரஸின் மோகன்குமார் 40.635 வாக்குகளுடன் 2-வது இடத்திலும் பாஜகவின் சுரேஷ் 27,453 வாக்குகளுடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளார். காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட வட்டியூர்காவில் சிபிஎம் 14.46% கூடுதலாக வாக்குகளைப் பெற்று அதிரடி காட்டியிருக்கிறது.

    கொன்னியில் சிபிஎம்

    கொன்னியில் சிபிஎம்

    இதேபோல் காங்கிரஸ் கோட்டையாக இருந்த கொன்னி சட்டசபை தொகுதியையும் அள்ளிவிட்டது சிபிஎம். 1996-ம் ஆண்டு முதல் கொன்னி தொகுதியில் காங்கிரஸின் அடூர் பிரகாஷ்தான் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் லோக்சபா எம்.பி.யானதால் கொன்னி தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டது.

    கொன்னியில் கோலோச்சும் பாஜக

    கொன்னியில் கோலோச்சும் பாஜக

    இத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு மட்டுமல்ல இடதுசாரிகளுக்கும் கடும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஏனெனில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரு மடங்கு இத்தொகுதியில் அதிகரித்திருக்கிறது.

    பாஜக வாக்கு சதவீதம் உயர்வு

    பாஜக வாக்கு சதவீதம் உயர்வு

    கொன்னி இடைத்தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் கே.யூ. ஜெனீஷ்குமார் 54,099 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். காங்கிரஸின் மோகன்ராஜ் 44,146 வாக்குகளுடன் 2-வது இடத்தையும் பாஜகவின் சுரேந்திரன் 39,786 வாக்குகளுடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர். அதாவது பாஜகவின் சுரேந்திரன் 29% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இத்தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் பாஜகவுக்கு 11% வாக்குகள்தான் கிடைத்தன.

    மடைமாறிய கிறிஸ்தவர் வாக்குகள்

    மடைமாறிய கிறிஸ்தவர் வாக்குகள்

    கொன்னி தொகுதியில் இடதுசாரிகள், காங்கிரஸ் இரண்டுக்கும் சரிசமமான வாக்கு வங்கி இருக்கிறது. இம்முறை இரு கட்சிகளிலும் அதிருப்தி நிலவியது. அத்துடன் இரு கட்சிகளின் மீது அதிருப்தியில் இருந்த கிறிஸ்தவர்கள் வாக்குகள் அப்படியே பாஜக பக்கம் மடைமாறிவிட்டன என்கின்றன களநிலவரம்.

    மஞ்சேஷ்வர் நிலவரம்

    மஞ்சேஷ்வர் நிலவரம்

    அடுத்ததாக ஆளும் இடதுசாரிகளை மட்டுமல்ல காங்கிரஸையும் கூட எப்பவும் கதிகலங்க வைக்கும் மஞ்சேஷ்வர் தொகுதி இம்முறையும் அலற வைத்திருக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான ஐயூஎம்எல் வேட்பாளர் எம்.சி. கமரூதின் 65,407 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

    மஞ்சேஷ்வரில் 2-வது இடத்தில் பாஜக

    மஞ்சேஷ்வரில் 2-வது இடத்தில் பாஜக

    அவருக்கு அடுத்ததாக பாஜகவின் ரவீஷ் தந்திரி குன்டார் 57,484 வாக்குகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆளும் இடதுமுன்னணிக்கு 38,233 வாக்குகள்தான் கிடைத்தன. இத்தொகுதியில் ஐயூஎம்எல் வேட்பாளரை விட 7,923 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருக்கிறார் பாஜகவின் ரவீஷ் தந்திரி. இருப்பினும் கடந்த 2016 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இத்தொகுதியில் பின்னடைவுதான் என கூற வேண்டும். ஏனெனில் 2016 தேர்தலில் ஐயூஎம்எல் வேட்பாளர் அப்துல் ரசாக் 56,870 வாக்குகளையும் பாஜகவின் சுரேந்திரன் 56,781 வாக்குகளையும் பெற்றிருந்தார். இருப்பினும் கேரளா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக தொண்டர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது என்பது மிகை அல்ல.

    பாஜகவுக்கு 23% வாக்குகள்

    பாஜகவுக்கு 23% வாக்குகள்

    கேரளா இடைத்தேர்தலில் சிபிஎம்-க்கு 32.01% வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 28.62%, பாஜகவுக்கு 23.04% வாக்குகள் கிடைத்திருக்கிறது. பாஜகவி இந்த விஸ்வரூபத்தால் அதிர்ந்து போயிருக்கின்றன இடதுசாரிகளும் காங்கிரஸும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+