பொய்யான வீடியோவை உருவாக்கி பரப்பியதால் பதற்றம்.. பிரபல யூடியூபரான பாஜக கவுன்சிலர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் ஒருவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக பொய்யான வீடியோவை உருவாக்கி பரப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் பிளஸ் 2 தேர்வு முடிவு ரத்து என்று பொய் செய்தி வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிகில் மனோகர், கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள பொருவழி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக உள்ளார். அவர் மீது மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி புகார் அளித்ததால், அவர் கைது செய்யப்பட்டார்.

சென்ற வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் வீ கேன் என்ற பெயர் கொண்ட யூடியூப் சேனலில், பிளஸ் டூ தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக நிகில் மனோகர் என்பவர் கூறியிருந்தார். இது "அபாயகரமானது" என்று கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் சிவன் குட்டி, பாஜக வார்டு உறுப்பினரான நிகில் மனோகர் தனது யூடியூப் சேனல் மூலம் தவறான செய்திகளை பரப்பி உள்ளார்.இதற்காக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று பொய் செய்திகளை பரப்புவது சமூகத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றமாகும்.
இதை கல்வித்துறையில் பயங்கரமான செயலாக கருதுகிறோம். பாஜக உறுப்பினரின் இந்த செயலுக்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது என்றார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications