விவசாய சட்டங்களுக்கு எதிரான கேரளா சட்டசபை தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. அதிரடி ஆதரவு
திருவனந்தபுரம்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான கேரளா சட்டச்பை தீர்மானத்தின் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சில அம்சங்களை ஏற்றுக் கொள்வதாக கூறி பாஜகவின் ஒற்றை எம்.எல்.ஏ. ஓ. ராஜகோபால் அதிரடியாக ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் குளிரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கேரளா சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு கேரளா சட்டசபையில் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஓ. ராஜகோபால் ஆதரவளித்திருக்கிறார்.
கேரளா சட்டசபையில் ஆளும் இடது முன்னணி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக எம்.எல்.ஏ. ஆதரவுடன் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சட்டசபையில் தீர்மானத்தின் மீது பேசிய பாஜக எம்.எல்.ஏ. ஓ. ராஜகோபால், இதேபோன்ற விவசாய சட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தன. இத்தகைய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியது. இப்போது விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றார்.
தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. ராஜகோபால், சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் என்னுடைய கருத்துகளை முன்வைத்திருக்கிறேன். சட்டசபை தீர்மானத்தின் மீது சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன. அதை சட்டசபையிலேயே சுட்டிக் காட்டியும் இருக்கிறேன். இந்த தீர்மானத்தை நான் முழுமையாகவே ஆதரிக்கிறேன் என்றார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. ஆதரவு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications