Kerala Bumper: கேரள லாட்டரியில் 20 கோடிக்கு பட்ட பாடு இருக்கே.. நிம்மதி கொடுத்த தீர்ப்பு! கையில் எவ்வளவு கிடைக்கும்?
திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அடித்தது. இந்த பரிசுத் தொகை தனக்கே அடித்ததாகவும், அந்த டிக்கெட்டை தவறுதலாக ஒருவருக்கு கூரியர் செய்துவிட்டதால் பரிசு உரிமை கோரி யார் வந்தாலும் எனக்கே தொகையை வழங்குமாறு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக விசாரித்த கேரள நீதிமன்றம், லாட்டரி சீட்டை ஒப்படைத்த நபருக்கே ரூ.20 கோடியை வழங்க உத்தரவிட்டது. இதனால் கடும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ரூ.20 கோடி பரிசினை பெற்றுள்ளார். கமிஷன், வரி பிடித்தம் போக அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்களை இங்கு காணலாம்.

ரூ.20 கோடி கேரள பம்பர் லாட்டரி
கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்தது. கோட்டயத்தின் கஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது.
ஆனால் வாங்கி சென்ற நபர் யாரென்ற விவரம் எனக்கு நினைவு இல்லை லாட்டரி ஏஜென்சி கடைக்காரர் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேல் ஆகியும் வெற்றியாளர் யார் என்ற விவரம் தெரியாமல் இருந்த நிலையில், திடீர் திருப்பமாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
நிம்மதி கொடுத்த தீர்ப்பு!
அதில், ரூ.20 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டை தானே வாங்கியதாகவும் அதில், தன்னுடைய பெயர், முகவரி, கையெழுத்து ஆகியவை உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த டிக்கெட்டை ஐயப்பர் பக்தர் ஒருவருக்கு அனுப்பும் பிரசாதத்தில் தவறுதலாக அனுப்பி விட்டதாகவும், இந்த டிக்கெட்டை கொரியர் ஊழியர் எடுத்து இருக்கலாம் எனவே, பரிசுத்தொகையை எனக்கே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இதனால் பரிசுத்தொகை வழங்குவதை நிறுத்தி வைத்த கேரள உயர் நீதிமன்றம், விசாரணைக்கு பின் கடந்த இரு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இதில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கூறியது போல, டிக்கெட்டில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று அவரது மனுவை நிராகரித்து, டிக்கெட்டை சமர்ப்பித்த நபருக்கு ரூ.20 கோடி பரிசு வழங்க உத்தரவிட்டது.
எவ்வளவு கையில் கிடைக்கும்?
பெரும் சட்ட போராட்டத்திற்க்கு பிறகு முதல் பரிசு லாட்டரி வாங்கியவரின் கைக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. ரூ. 20 கோடியில் அவருக்கு வரி பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 20 கோடி பரிசுத்தொகையில் 63 சதவீதம் அளவிற்கு அவருக்கு பரிசுத்தொகை கிடைக்கும்.
முதல் பரிசுத்தொகையில் ஏஜென்சி கமிஷனாக 12 சதவீதம் பிடிக்கப்படும். வருமான வரித்தொகையாக 30 சதவீதமும், பிடித்துக்கொள்ளப்படும். இதன்படி முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு சுமார் ரூ.12.7 கோடி முதல் பரிசாக கையில் கிடைக்கும்.
பரிசு வென்றவர் யார்?
எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைத்து இருந்தார். இதனை எதிர்த்து தான் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் கூறியதுபோலவே லாட்டரி டிக்கெட்டின் பின்புறம் பெயர் எதுவும் எழுதாமல் இருந்துள்ளது. இதையடுத்து தான் நீதிமன்றம் எர்ணாகுளத்தை சேர்ந்தவரே வெற்றியாளர் என்று உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications