கேரள பஸ் வீடியோ.. வசமாக சிக்கும் இளம்பெண்.. செல்போனில் மேலும் 7 வீடியோக்கள்.. வெளியான ஷாக் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ரீல்ஸ் வீடியோவால் தீபக் உயிரை மாய்த்த வழக்கில் கைதான ஷம்ஜிதா 7 வீடியோக்களை பேருந்தில் எடுத்துள்ளதாக போலீசின் ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தோரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொந்தரவுக்கான எந்த ஆதரவும் இல்லை என தெரிவித்து ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளவில் ரீல்ஸ் மோகத்தில் ஷம்ஜிதா என்ற பெண், தனது அருகில் நின்ற தீபக் என்ற நடுத்தர வயது நபர், பாலியல் தொந்தரவு செய்வதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

தற்கொலை செய்துகொண்ட தீபக்
வீடியோவில் குற்றசாட்டுக்கு உள்ளான தீபக்கின் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இதுபற்றி அவரிடம் கேட்க, மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர் விபரீத முடிவை எடுத்தார். கடந்த 18 ஆம் தேதி இரவு தனது படுக்கை அறைக்கு தூங்க சென்ற தீபக், கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் வெகுநேரம் ஆகியும் தீபக் எழுந்து இருக்கவில்லையே என்று கதவை தட்டியுள்ளனர் பெற்றோர்.
திரும்ப திரும்ப கதவை தட்டியும் சத்தம் எதுவும் இல்லாத்தால், கதவை உடைத்து பார்த்த போது தீபக் தற்கொலை செய்தது தெரியவந்தது. இளம்பெண்ணின் ரீல்ஸ் மோகம் ஒருவரின் உயிரையே காலி செய்த சம்பவம் கேரளா மட்டுமின்று நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பதிவிட்ட ஷம்ஜிதா கைது
தீபக்கின் தற்கொலை குறித்த செய்தி வெளியானதும் ரீல்ஸ் வெளியிட்ட ஷம்ஜிதாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். வீடியோவை டிகோட் செய்த நெட்டிசன்கள், ஷம்ஜிதாதான் வேண்டும் என்றே அவருடன் நெருக்கமாக நிற்பதாகவும், அவர் இறங்கும் போது ஏதேச்சையாக கைபட்டது போல தெரிகிறதே தவிர உள்நோக்கத்துடன் அப்படி நடந்து கொண்டது போல இல்லை என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.
அதே நேரத்தில் இளம்பெண்ணுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறிவந்தனர். இதற்கிடையே, கேரள போலீசர் அந்த இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் கைது ஆவோம் என அஞ்சிய இளம்பெண், கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கினார். தலைமறைவாக இருந்த ஷம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
பஸ்சில் 7 வீடியோக்கள் எடுத்துள்ளார்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷம்ஜிதாவை 14 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். ஷம்ஜிதா மீது பிஎன் எஸ் சட்டம் பிரிவு 109 (தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதற்கிடையே போலீசாரின் ரிமாண்ட் அறிக்கையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஷம்ஜிதா 7 வீடியோக்களை எடுத்து இருப்பதாக போலீசின் ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தோரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொந்தரவுக்கான ஆதராமும் இல்லை என்றும் தெரிவித்துள்ள போலீசார் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் வழங்கக் கூடாது
ஷம்ஜிதாவிற்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஷம்ஜிதா இதேபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட வாய்ப்பு உள்ளது, இதேபோன்ற செயலில் பிற பெண்களும் ஈடுபட வய்ப்பு உள்ளது. இதனால், தற்கொலைகள் அதிகரிக்கும். சாட்சிகளை குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டி விசாரணைக்கு இடையூறு செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தங்கள் ரிமண்ட் அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications