Christmas bumper: கிறிஸ்துமஸ் நியூஇயர் பம்பர் லாட்டரி வந்தாச்சு.. ரூ.20 கோடி! தூக்கப்போவது யார்? பரிசுத்தொகை விவரம்
திருவனந்தபுரம்: பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் முடிந்து JD 545542 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. பூஜா பம்பரை தொடர்ந்து தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் (Christmas bumper) லாட்டரியை கேரள அரசு வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். இதற்கான பரிசு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் மிகவும் பிரபலம். அங்கு மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை செய்கின்றன. நம்ம ஊரில் டீக்கடை இருப்பது போல அங்கு திரும்பிய திசையெல்லாம் லாட்டரி டிக்கெட்டுகளே கண்ணில் படும். அந்த அளவிற்கு அங்கு லாட்டரி டிக்கெட் கடைகளை அதிகம் காண முடியும்.

கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி
குறிப்பாக குமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் கேரள பார்டர் எது என்று கண்டுபிடிக்க லாட்டரி கடைகளே நமக்கு உதவும். அந்த அளவு கேரளாவில் லாட்டரிகள், சேட்டன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப்பயணிகள் என ஒரு சில வெளிமாநிலத்தவர்கள் கூட இங்குள்ள லாட்டரிகளை வாங்குவதை பார்க்க முடிகிறது.
கேரளாவை பொறுத்தவரை அங்கு தினசரி ரூ.1 கோடிக்கான லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோக, வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. சீசனுக்கு தகுந்தபடி லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. கடந்த 22 ஆம் தேதி பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது.
முதல் பரிசு ரூ.20 கோடி
பாலக்காட்டில் உள்ள கிங் ஸ்டார் லாட்டரி ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது. இன்னும் வெற்றியாளர் யார் என்பது கண்டறியப்படவில்லை. பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் முடிந்த நிலையில், கேரளாவில் தற்போது கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். ,முதல் பரிசாக இந்த டிக்கெட்டுக்கு ரூ.20 கோடி அளிக்கப்படுகிறது. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்படுகின்றன.
e gross value of the tickets will be ₹257.14 crore. The tickets are issued in ten series (XA, XB, XC , XD, XE, XG, XH, XJ, XK, XL) என மொத்தம் 10 சீரியஸ்களில் அச்சிடப்படுகிறது. மொத்த மதிப்பு 257.14 கோடியாகும். இந்த டிக்கெட்டிற்கு இரண்டாவது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு 10 லட்சமும் 4 வது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு ரூ.3 லட்சமும் அளிக்கப்படுகிறது.
பரிசு விவரங்கள்
மொத்தம் ரூ. 93.22 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. சமூக நலம் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக லாட்டரி டிக்கெட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படும் என்று கேரள அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளது. கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் அடுத்த ஆண்டு 24.01.2026 அன்று நடைபெறும் என கேரள லாட்டரி செய்திகளை வெளியிடும் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாட்டரி டிக்கெட்டுகள் ஓரிரு நாட்களில் கடைகளில் விற்பனைக்கு வந்துவிடும் என்று லாட்டரி வியாபாரிகள் கூறினர்.
Disclaimer லாட்டரி டிக்கெட்டுகள் பொருளாதார ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். லாட்டரி விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. தமிழகத்தில் லாட்டரிகளுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும். தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதோ, விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கேரள அரசு பரிசு வழங்க மறுக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications